தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுனைனா. இவர் அரேபிய சமூக வலைதள பிரபலமான கலித் அல் அமேரி என்பவரை காதலித்து வந்தார். மேலும் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதாகவும் சுனைனா கடந்த 2024 ஆம் ஆண்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் சுனைனா மற்றும் கலித் அல் அமேரிக்கு பிரேக் அப் ஆகியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

Continues below advertisement

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்த நடிகை சுனைனா. இவர் மாசிலாமணி , வம்சம் , நீர்ப்பறவை , தெறி , சில்லு கருப்பட்டி , குபேரா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர்த்து தெலுங்கு மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

36 வயதான சுனைனா இதுவரை  திருமணம் செய்துகொள்ளவில்லை. இவர் துபாயைச் சேர்ந்த பிரபல யூடியூபர்  கலித் அல் அமேரி (Khalid Al Ameri) என்பவரை காதலித்து வருவதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் வெளியாகின. கடந்த 2024 ஆம் ஆண்டு சுனைனா தனது திருமணம் நிச்சயிக்கப்படுவிட்ட தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இதே புகைப்படங்களை கலித் அல் அமேரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதும் சுனைனாவின் காதலர் அவர்தான் என ரசிகர்கள் உறுதி செய்தனர்.

Continues below advertisement

கலித் அல் அமேரி ஒரு பிரபல யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவரது வீடியோக்கள் நகைச்சுவை மற்றும்  பொழுதுபோக்கு அம்சங்களுக்காக பெயர் போனவை. இந்த சேனலுக்கு சுமார் 3 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளார்கள்.  சமீபத்தில் நடிகர் மம்மூட்டியுடனான இவரது நேர்காணல் சமூக வலைதளத்தில் வைரலானது. இவருக்கு ஏற்கனவே சலாமா முகமத் என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். கலித் மற்றும் சலாமா தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்கள். இன்ஸ்டாகிராமில் வைரலாக அறியப்பட்ட ஜோடிகளில் இந்த ஜோடியும் ஒன்று . தனிப்பட்ட காரணங்களால் சலாமா மற்றும் கலித் விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்

காதலனை பிரிந்த சுனைனா 

விரைவில் சுனைனாவும் கலித் அல் அமேரியும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இருவரும் பிரிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்து இருதரப்பினர் சார்பாகவும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.