Captain Miller: கேப்டன் மில்லர் படத்தை ரசிகர்களுடன் ரசித்த தனுஷ் மகன்கள்!
தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தை தனுஷின் இரு மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா திரையரங்கில் பார்க்கச் சென்றுள்ளனர்

தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தை தனுஷின் இரு மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா சென்னை ரோகினி திரையரங்கில் பார்க்கச் சென்றுள்ளனர்
கேப்டன் மில்லர்
Just In




ராக்கி, சாணிக்காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக இயக்கியுள்ள படம் “கேப்டன் மில்லர்”. தொடரி, பட்டாஸ், மாறன் என தனுஷை வைத்து 3 படங்களை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, 4வது முறையாக தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் , சந்தீப் கிஷம் நிவேதா தாமஸ், அதிதி பாலன், ஷிவராஜ் குமார், ஜெயபிரகாஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஜி வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இதுவரை தனுஷ் நடித்தப் படங்களில் அதிக பட்ஜெட் சுமார் 80 கோடி செலவில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கேப்டன் மில்லர் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
படம் பார்த்து மகிழ்ந்த தனுஷ் குடும்பத்தினர்
கேப்டன் மில்லர் படத்தைப் பார்க்க தனுஷ் ரசிகர்கள் திரையரங்கத்திற்கு படையெடுத்து வரும் நிலையில் , நடிகர் தனுஷின் இரு மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இருவரும் தனது தந்தை நடித்துள்ள படத்தைப் திரையரங்கில் பார்த்து ரசித்து வருகிறார்கள். இருவரும் சென்னை ரோகினி திரையரங்கில் கேப்டன் மில்லர் படத்தைப் பார்க்க சென்றபோது எடுக்கப் பட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகிறது.
பொங்கல் வெளியீடுகள்