கடந்த 2015ஆம் ஆண்டு காருக்கு நுழைவு வரி ரூ.60.66 லட்சம் செலுத்த வணிகவரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் வழக்கு தொடர்ந்திருந்தார். 50 சதவீதம் வரி செலுத்தினால் காரை பதிவு செய்ய ஆர்டிஓ அலுவலகத்துக்கு 2015ஆம் ஆண்டு அக்டோபரில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ரூ.30.33 லட்சம் வரி செலுத்தியதாக தனுஷ் கூறியதால் விதிகளை பின்பற்றி பதிவு செய்ய 2016ஆம் ஆண்டு ஏப்ரலில் உத்தரவிடப்பட்டது. ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் இன்று (05/08/2021) தீர்ப்பளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் நடிகர் தனுஷ் தொடர்ந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்க உள்ளதாக நீதிபதி எஸ்.சுப்ரமணியம் தலைமையிலான அமர்வு தெரிவித்திருந்தது. ஏற்கனேவே நடிகர் விஜய் வரி விலக்கு கேட்ட வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன், தீர்ப்புக்கு முன் நடிகர் தனுஷ் மீது பரபரப்பான கருத்துக்களை முன் வைத்தார். எஞ்சியிருக்கும் வரியை செலுத்த தயாராக இருப்பதாக தனுஷ் தெரிவித்த நிலையில், அதை ஏற்க மறுத்த நீதிபதி, மனு அளித்துவிட்டு எதற்காக வாபஸ் பெற வேண்டும் என்றும் கண்டித்தார். 


தனுஷ் மனு மீது நீதிபதி தெரிவித்த கருத்துக்கள்:


*திங்கட் கிழமைக்குள் நுழைவு வரி செலுத்த தயார் - தனுஷ் 


*மனுவில்  தான் ஒரு நடிகர் என ஏன் தனுஷ் குறிப்பிடவில்லை- நீதிபதி எஸ்.எம்.சுப்புரமணியம் கேள்வி


*யார் வழக்கு தொடர்ந்தாலும் தான் யார்? என்ன தொழில் செய்பவர் என்பதை மனுவில் தெரிவிக்க வேண்டும்- நீதிபதி


*தான் ஒரு நடிகர் என்பதை மறைத்தது குறித்து தனுஷ் விளக்கம் அளிக்க வேண்டும்- நீதிபதி


*நுழைவு வரி செலுத்த தயார் என்பதை மனுவாக தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவு..


*இன்று பிற்பகல் 2:15 மணிக்குள்  நுழைவு வரி பாக்கி குறித்து வணிக வரித்துறை தனுஷுக்கு தெரிவிக்க வேண்டும்- நீதிபதி.


*மனுவை திரும்ப பெறுவதாக நடிகர் தனுஷ் கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுப்பு..


*ஒரு சோப்பு வாங்கும் சாமானியர் கூட வரி செலுத்தி வருகிறார்கள்- நீதிபதி


*இன்று பிற்பகல் 2:15 மணிக்கு இறுதி தீர்ப்பு வழங்கப்படும்- நீதிபதி


*அனைவரும் பொறுப்புடனும் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்..- நீதிபதி


*பெட்ரோல் விலை ஏற்றம் காரணமாக வெறும் 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் சாமானியர் கூட வரி செலுத்தி வருகிறார்கள்- நீதிபதி.


*கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் ரோல்ஸ் ராய்ஸ் காரை இங்கிலாந்தில் இருந்து இறக்கு மதி செய்தார்.


 


இது தொடர்பான கூடுதல் செய்திக்கு:


Dhanush Rolls Royce Car: ரூ.50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் பால்காரர் நீதிமன்றம் வந்தாரா? தனுஷ் மீது பாய்ந்த நீதிபதி!


அதே கார்... அதே வழக்கு... அதே நீதிபதி... விஜய்க்கு பதில் தனுஷ்! சொகுசு கார் வரி விலக்கில் நாளை தீர்ப்பு!