'வாத்தி' படத்திற்கு பின்னர் இரண்டாவது முறையாக தனுஷ், தெலுங்கு பட இயக்குனருடன் கைகோர்த்த திரைப்படம் தான் 'குபேரா'. 'வாத்தி' படத்தை வெங்கி அட்லூரி இயக்கி இருந்த நிலையில், 'குபேரா' படத்தை சேகர் காமுலா இயக்கியுள்ளார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை ரூ.120 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து நாகர்ஜுனா, ராஷ்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், நேற்று ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்தாலும், மற்றொரு தரப்பினர் மத்தியில் நெகடிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது.
இந்த படத்தில் தனுஷ் பிச்சைக்காரர் வேடத்தில் நடித்து ஆர்ச்சயப்படுத்தி உள்ளார். அதே நேரம் தனுஷின் நடிப்பும், இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
'குபேரா' திரைப்படம் வெளியானது முதலே... இப்படம் குறித்து, பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது இந்த படத்தில் நடிப்பதற்காக பிரபலங்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 'குபேரா' திரைப்படத்தின் தூணாக இருக்கும் நடிகர் தனுஷ், ரூ.30 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.
இவரை தொடர்ந்து, நடிகர் நாகர்ஜுனா ரூ. 14 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது . அதே போல் நடிகை ராஷ்மிகா மந்தனா, 'குபேரா' படத்திற்காக தன்னுடைய சம்பளத்தை குறைத்து கொண்டுள்ளார். 'சிக்கந்தர்' படத்தில் நடிக்க ரூ.12 கோடி சம்பளம் வாங்கிய ராஷ்மிகா இந்த படத்திற்காக வெறும் 5 கோடி மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளார்.
மற்ற நடிகர்களுக்கு சில லட்சங்களில் மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சேகர் காமுலா ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாகவும், இவரை தொடர்ந்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு ரூ. 3 கோடி சம்பளம் கொடுத்துள்ளதாக தகவல். ஆனால் இந்த தகவல் குறித்து, எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.