தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் திரைப்படங்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் சில காட்சிகள் இடம்பெறும். அதனை பார்க்கும் போது கோலிவுட் மட்டும் இல்லை ஹாலிவுட் சினிமாவே உங்களிடம் தான் கையேந்தனும் என்ற அளவிற்கு நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்குவார்கள். குறிப்பாக ஒரு சில சீரியல்கள் அப்படியே தமிழ் படத்தின் சாயலில் இருப்பதை கவனிக்கலாம். அதுவும் 90களில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சூர்ய வம்சம், நாட்டாமை, பூவே உனக்காக போன்ற பல படங்களின் படங்களின் கதையை உல்ட்டா செய்து பல சீரியல்கள் ஹிட் அடித்துள்ளன.
லாஜிக் இல்லாத சீரியல்கள்
அந்த வகையில், சன்டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் இடம் பிடித்திருக்கும் ஒரு காட்சி தான் தற்போது டிரெண்டிங்கில் இருக்கிறது. அதனை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். இது என்ன பிரமாதம் அதைவிட ஒரு காட்சி தான் அனைவரையும் பிரம்மிக்க வைத்தது. நெற்றியில் குண்டடிபட்ட பெண் ஒருவர் பல மணி நேரம் தன் கணவருடன் பேசிக்கொண்டே வருவது நகைப்பை ஏற்படுத்தியது. என்னடா லாஜிக் இது எப்புடி இப்படியெல்லாம் முடியுது என்கின்ற அளவிற்கு கிண்டல் செய்தனர். முக்கிய குறிப்பு அந்த சீரியல் ஒளிபரப்பானது சன் டிவியில் தான்.
கிண்டல் அடிக்கும் ரசிகர்கள்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் டாப் 3 இடங்களை பிடித்து மக்களின் பேராதரவை பெற்றுள்ளது. இதில், நகைச்சுவையான சில காட்சிகளையும் ரசிகர்கள் கலாய்த்துள்ளனர். கயல் சீரியலில் பிரச்னை இல்லாத நாளே இல்லை. முதலில் பெரியப்பா, பிறகு மருத்துவர், தற்போது தங்கையின் கணவர் என கடந்து செல்கிறது. தங்கையின் கணவர் என்ற போது தான் ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வந்து செல்கிறது. இந்த சீரியலில் கயலின் தங்கைக்கு குழந்தை பிறப்பதை 2 வருடங்களாக எபிசோடுகளை கடத்தி வந்ததை கலாய்க்க தொடங்கினர்.
பிச்சைக்காரன் படத்தை காபி செய்த கயல்
பல படங்களில் இருக்கும் சீன்களை பிட்டு பிட்டாக சேர்த்து ரசிக்கும் படி சீரியல்களில் வைப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால், கயல் சீரியலில் அதையும் தாண்டி ஒரு சர்ப்ரைஸ் ரசிகர்களுக்கு வைத்திருக்கிறார்கள். ஆனால், அது பிச்சைக்காரன் படத்தில் இடம்பெற்ற காட்சியை அப்பட்டமாக அப்படியே காப்பி அடித்துள்ளனர். ஹீரோயின் தெரியாமல் ஒரு கார் மீது பைக்கை இடித்து விடுவார். அப்போது, கார் ஓனரிடம் விஜய் ஆண்டனி வாக்குவாதம் செய்து, அந்த கார் பாண்டிச்சேரியில் புக் செய்தது என்றும் டீசல் மிச்சம் செய்ய காரில் ஏசியை கூட போடலை என ஹீரோ கலாய்ப்பார். தற்போது அதே காட்சியை கயல் சீரியலில் இடம்பிடித்துள்ளது.
காரில் மோதும் கயல்
பைக்கை ஓட்டி வரும் ஹீரோயின் கயல் காரை இடிக்க உடனே ஹீரோவான எழில் பேசும் வசனம் அப்படியே பிச்சைக்காரன் படத்தில் இருந்ததை போன்றே வைத்துள்ளனர். கொஞ்சம் கூட மாத்தவில்லை என ரசிகர்கள் கலாய்க்க தொடங்கியுள்ளனர். காப்பி அடிப்பதில் ஒரு நியாயம் வேண்டாமா என கேட்க தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.