நடிகர் தனுஷ் நடிக்கும் மும்மொழி திரைப்படம் ஒன்றில் வில்லனாக நடிக்க சஞ்சய் தத் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


தனுஷ் லைன்-அப்


இந்திய சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகராக உருவாகியிருக்கும் தனுஷ், ஹாலிவுட்டில் கிரே மேன் போன்ற படங்களிலும் நடித்து மென்மேலும் உயரத்தை அடைந்து வருகிறார். அதுமட்டுமின்றி தமிழ் சினிமா உலகிலும் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற அடுத்தடுத்து ஈர்க்கக்கூடிய வெற்றிகளுடன் முக்கியமான இடத்தில் இருக்கிறார். தற்போது அவர் கேப்டன் மில்லர், கிரே மேன் 2 மற்றும் வாத்தி போன்ற படங்களின் படப்பிடிப்பில் பரபரப்பாக உள்ளார். அவரது அடுத்தடுத்த படங்களின் லைன்-அப்பை கண்டு அதிசயிக்கின்றனர் ரசிகர்கள். அந்த வரிசையில் அறிவிக்கப்பட்டுள்ள மற்றொரு வித்யாசமான முயற்சி தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கும் பேன் இந்திய திரைப்படம் ஆகும்.



பெயரிடப்படாத பான்-இந்தியப் படம்


சிறிது நாட்களுக்கு முன்பு படம் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கான ப்ரி புரொடக்ஷன் வேலைகள் துவங்கி உள்ளன. இந்த படம் குறித்து சமீபத்தில் ஒரு பரபரப்பான அப்டேட் வெளியாகியுள்ளது. சமீபத்திய தகவல்களின் படி, தனுஷின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்க சஞ்சய் தத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கு முன், யாஷ் நடித்த கேஜிஎஃப்: அத்தியாயம் 2 படத்தில் வில்லனாக நடித்து சஞ்சய் தத் இந்திய திரையுலக ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். அதன் பிறகு அவரை வில்லனாக வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்: அய்யோ.. மீண்டும் புயல் சின்னமா? நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்றைய வானிலை நிலவரம்..


ஒப்புதல் அளித்த சஞ்சய் தத்


தனுஷ் படத்திற்காக அவரை அணுகியதும் சஞ்சய் தத்தும் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில் ரசிகர்கள் இப்போதே தங்களது எதிர்பார்ப்பை வெளிக்காட்ட துவங்கி உள்ளனர். இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், படத்தின் படப்பிடிப்பு 2023 முதல் பாதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியிடப்படுவதால் கிட்டத்தட்ட பேன்-இந்திய திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 



தளபதி 67-இல் சஞ்சய் தத்


இது தவிர, தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜின் தளபதி 67 இல் வில்லனாக நடிக்கவும் நடிக்க சஞ்சய் தத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. வில்லனாக அவர் நடித்தால் இந்தி மார்க்கெட்டில் நல்ல விலை போகும் என்பதால் பல பெரிய படங்களில் அவரை புக் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். தளபதி 67-ஐ பொறுத்தவரை "ஸ்கிரிப்ட்டில் பல சக்திவாய்ந்த வில்லன்கள் வைக்கவேண்டிய அளவுக்கு உள்ளதாகவும், இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் பல வில்லன்களில் முக்கியமானவராக வரும் கதாபாத்திரத்திற்கு சஞ்சய் தத்தை விட சிறந்த நடிகர் இல்லையோ என்பதால், லோகேஷ் கொஞ்ச நாளாகவே சஞ்சய் தத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இந்த படத்தில் நடிக்க நடிகர் ரூ. 10 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்,” என்று நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கின்றன. மேலும் சஞ்சய் தத் இருப்பதால் இந்த படம் பான் இந்தியன் திரைப்படமாக மாறும் என்று கூறப்படுகிறது.