துள்ளுவதோ இளமை படம் கோலிவுட்டில் அறிமுகமான தனுஷ் தற்போது பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்துவருகிறார். தமிழ் சினிமாவில் தற்போதைய நடிகர்களில் சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் தனுஷ். அவர் தற்போது துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்திலும், ஹிந்தியில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே படத்திலும் நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து தனது அண்ணனான செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்துவருகிறார். நீண்ட வருடங்களுக்கு பிறகு செல்வராகவனும், தனுஷும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தெலுங்கில் பிரபல இயக்குநர்களில் ஒருவரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கிறார். தயாரிப்பாள் நாகா வம்சி தயாரிக்கும் இப்படம் தமிழிலும் நேரடி தெலுங்கு படமாகவும் வெளியாகிறது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னுடைய அடுத்த தமிழ் படமும், என்னுடைய முதல் நேரடி தெலுங்கு படமும். படத்தின் தலைப்பு நாளை காலை 9.36 மணிக்கு அறிவிக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
கோலிவுட் தவிர்த்து பாலிவுட், ஹாலிவுட்டில் தடம் பதித்திருக்கும் தனுஷ் தற்போது இந்தப் படம் மூலம் தெலுங்கிலும் தடம் பதிக்க இருக்கிறார். அதேபோல் தமிழ் நடிகர்கள் நேரடி தெலுங்கு படங்களில் நடிப்பது சமீபமாக அதிகரித்துள்ளது. விஜய்யும் வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகும் படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்