Dhanush: இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்... நாளை வெளியாகிறது முக்கிய அப்டேட்!

தனுஷின் அடுத்தப் படத்தின் அப்டேட் நாளை மார்ச் 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது

Continues below advertisement

இளையராஜாவின் சுயசரிதை படத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் நிலையில், அப்படத்திற்கான அப்டேட் நாளை வெளியாக இருக்கிறது.

Continues below advertisement

தனுஷ் 

ராயன் படத்தை இயக்கி முடித்துள்ள தனுஷ் தற்போது குபேரா படத்தில் நடித்து வருகிறார். சேகர் கம்முலா இயக்கும் இப்படத்தில் ராஷ்மிகா , நாகர்ஜுனா ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் தனது அடுத்தப் படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார் நடிகர் தனுஷ்.

இளையராஜாவாக தனுஷ்

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை படமாக உருவாக இருப்பதாக கடந்த ஆண்டு தகவல் வெளியானது . இந்தப் படத்தில் தனுஷ் இளையராஜாவாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது இப்படம் குறித்த அப்டேட் நாளை வெளியாகும் என தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். உலகநாயகன்  கமல்ஹாசன் இந்த தகவலை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள்  மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.

Continues below advertisement
Sponsored Links by Taboola