குபேரா

ராயன் படத்தைத் தொடர்ந்து தனுஷ் நாயகனாக நடித்து வெளியாக இருக்கும் படம் குபேரா. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார். தனுஷ் , நாகர்ஜூனா , ராஷ்மிகா மந்தனா , ஜின் சார்ப் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தேவிஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

வரும் ஜூன் 20 ஆம் தேதி தமிழ் , இந்தி , தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. குபேரா பட டீசர்  சமீபத்தில் வெளியாகி வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது,  கமர்சியல் கதாபாத்திரங்களில் நடித்து வந்த தனுஷ் இந்த படத்தில் பிச்சைக்காரனாக நடித்துள்ளது படத்தின் மீது எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. பணத்தை மையமாக வைத்து நகரும் இந்த படம் தனுஷ் நடிப்பிற்கு தீனி போடும் கதையம்சமாக அமைந்துள்ளது என தனுஷ் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

குபேரா பட முதல் விமர்சனம் 

திரையரங்கில் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் குபேரா படத்தின் விமர்சனம் சினிமா வட்டாரங்களில் வெளியாகத் தொடங்கியுள்ளன. சினிமா வட்டாரத்தைச் சேர்ந்த சிலர் இந்த படத்தை பார்த்த அனுபவத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள் " திரைக்கதை , நடிப்பு என படம் ஒரு ராவாக அமைந்திருப்பதாகவும் தனுஷிற்கு ஒரு ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படமாக குபேரா படம் இருக்கும் என்றும் இந்த பதிவில் குறிப்பிடப் பட்டுள்ளது.