விஜயைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரவிருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது மற்றொரு தகவல் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தலில்  முதலமைச்சர் விஜயின் வெற்றியை முன்பே கணித்த பிரபல ஜோதிடரான ராதன் பண்டித்தை தனுஷ் சந்தித்து ஆலோசனை பெற்றுள்ளதாக வலைப்பேச்சு அந்தணன் புதிய தகவலை தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். 

Continues below advertisement

ராதன் பண்டித்தை சந்தித்த தனுஷ்?

வலைப்பேச்சு அந்தணன் கூறிய தகவலின்படி, தமிழகத்தின் எதிர்கால முதலமைச்சராக வருவதற்கான யோகம் தனுஷின் ஜாதகத்தில் உள்ளதா என்பதை அறியவே ராதம் பண்டித்தை அவர் அணுகியிருப்பதாக கூறியுள்ளார். மேலும், தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகள் வரவிருக்கும் தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திட்டத்தில் இருப்பதாகவும், அதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியல் ரீதியாக ஆதரவு வழங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதற்கிடையில், நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தனுஷ் ஆற்றிய பேச்சும் இந்த தகவலுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. ஜூலை 28 ஆம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ் தனது ரசிகர்களை நேற்று ஜூலை 26 அன்று சந்தித்து நலத்திட்ட உதவிகளை செய்துவைத்தார். தனது ரசிகர்களை நோக்கி பேசிய தனுஷ், "நாம் நல்லவர்களாக இருந்தால் போதாது. நமக்கு பின்னால் வருபவர்களுக்கும் நல்லது செய்ய வேண்டும். நம்மால் முடிந்த உதவிகளை மக்களுக்கு தொடர்ந்து செய்யுங்கள்"என்ற கருத்தை வலியுறுத்தினார். அவரது இந்த பேச்சு, ரசிகர் மன்றங்களை சமூக மற்றும் பொதுப்பணிகளில் தீவிரமாக ஈடுபடச் செய்யும் அரசியல் முன்னோட்டமாகவே பலரால் பார்க்கப்பட்டது.

Continues below advertisement

ஏற்கனவே நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் இயக்கமாக மாற்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், தனுஷின் சமீபத்திய பேச்சும், தற்போது வெளியாகியுள்ள ஜோதிடர் சந்திப்பு குறித்த தகவலும் இணைந்து பார்க்கப்படுகின்றன. இதனால், தனுஷும் அரசியல் பயணத்துக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாரா என்ற விவாதம் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் தீவிரமடைந்துள்ளது.

தற்போதைக்கு தனுஷ் தரப்பில் இதுகுறித்து எந்த விளக்கமும் வெளியாகவில்லை என்றாலும், ராதம் பண்டித் சந்திப்பு குறித்த தகவலும், ரசிகர் மன்றங்களை தேர்தல் களத்தில் இறக்கும் திட்டம் குறித்த தகவலும், தனுஷின் அரசியல் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.