இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் குபேரா. இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்போடு இன்று திரையரங்கில் வெளியான குபேரா படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இப்படத்தை பார்த்த சிலர் பாசிட்டிவான விமர்சனங்களை தந்துள்ளனர். இந்நிலையில், நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் இப்படம் குறித்து விரிவாக பேசியிருப்பது ஆச்சர்யத்தை அளித்திருக்கிறது.

Continues below advertisement

சேகர் கம்முலா - தனுஷ் கூட்டணி

தெலுங்கு திரையுலகில் ஃபிடா, லவ் ஸ்டோரி, ஹேப்பி டேஸ், ஆனந்த், கோதாவரி, லீடர் போன்ற பீல் குட் படங்களை இயக்கியவர் சேகர் கம்முலா. இவரது படங்களுக்கென்ற தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். இவர் நயன்தாராவை வைத்த அனாமிகா என்ற படத்தையும் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக வெளியான செய்தி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கத்தியும், ரத்தமும் இல்லாமல் இதயங்களின் உரையாடல்களை காட்சிகள் மூலம் நிகழ்த்துபவர் சேகர் கம்முலா. அதற்கு சாட்சியாக அவரது படங்களை குறிப்பிடலாம். 

ரசிகர்களுடன் தனுஷ்

சேகர் கம்முலா - தனுஷ் கூட்டணியில் உருவாகியிருக்கும் குபேரா திரைப்படம் இன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது இளைய மகன் லிங்காவுடன் ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார். மேலும் படத்தை பார்த்த பலரும் தனுஷூக்கு அடுத்த தேசிய விருது உறுதி என்றும் பாராட்டி வருகின்றனர். தனுஷ் நடிப்பை பார்த்து மெர்சல் ஆன ரசிகர்கள் உற்சாகத்துடன் நல்ல கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். 

Continues below advertisement

பயில்வான் ரங்கநாதன் விமர்சனம்

குபேரா படத்தை பார்த்த பயில்வான் ரங்கநாதன், தனுஷ் இப்படத்தில் பிச்சைக்காரனாக நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார். ஒரு நடிகர் பிச்சைக்காரனாக நடிப்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை. தனுஷ் கோயிலில் அமர்ந்து பிச்சை எடுப்பதை பார்க்கும் போது உண்மையில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். குபேரா படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கத்தியும், அரிவாள் வெட்டு சத்தங்களோடு படத்தை பார்த்து வந்த ரசிகர்களுக்கு இந்தப் படம் வித்தியாசமான அனுபவத்தை தரும்.

ரஜினி வாங்காத பெயர்

குபேரோ திரைப்படம் 3 மணி நேரம் ஓடுகிறது. கொஞ்சம் ஸ்லோவோகத்தான் செல்கிறது. அட்ஜெஸ்ட் செய்து பார்த்துதான் ஆக வேண்டும். இந்தப் படம் தனுஷுக்கு வேறு ரேஞ்சில் பெயர் கிடைக்கும். அவரது முன்னாள் மாமனார் ரஜினிகாந்த் வாங்காத பெயரை தனுஷ் வாங்கிவிடுவார். அந்த அளவிற்கு வேற ரேஞ்சில் தனுஷ் நடித்திருக்கிறார். நாகர்ஜூனா இந்தப் படத்தில் நல்லவரா கெட்டவரா என்பது இயக்குநர் சேகர் கம்முலாவிற்கு மட்டுமே தெரியும். அந்த ராஷ்மிகா பொண்ணு இதில் வேறு வாழ்க்கையை வாழ்ந்திருக்கு. குறிப்பாக இந்த படத்தில் பணம் இருந்தால் நிம்மதி வந்துவிடும் என்ற எண்ணத்தை உடைத்திருக்கிறது. 

200 கோடி லாபம்

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இப்படம் 200 கோடிக்கு விற்பனையாகிவிட்டது. படத்தில் பாடல்கள் சுமாராத்தான் இருக்கு. பின்னணி இசையில் தேவிஸ்ரீ பிரசாத் கலக்கிவிட்டதாகவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார். மேலும், இப்படத்தை கொஞ்சம் பொறுமை காத்துதான் பார்த்தாக வேண்டும் என்பதை மேலும் அழுத்தமாக தெரிவித்தார்.