மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள கர்ணன் படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் திரைப்படம் திரையுலகினராலும், தனுஷின் ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தயாரிப்பாளர் எஸ். தாணு தயாரிக்கிறார். இத்திரைப்படத்தின் First Look போஸ்டர் வெளியான நாள்முதல் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. பண்டாரத்தி புராணம் என்ற பாடலுக்கு தடைவிதிக்கக்கோரி புகார் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.

சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின் படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும், #Karnan திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் @dhanushkraja @mari_selvaraj @Music_Santhosh #KarnanFromTomorrow
— Kalaippuli S Thanu (@theVcreations) April 8, 2021

நாளை கர்ணன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திரையரங்குகள் 50 சதவிகித இருக்கைகளோடு மட்டுமே இயங்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் தளத்தில் தயாரிப்பாளர் எஸ். தாணு வெளியிட்ட அறிக்கையில் 'சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின் படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும், கர்ணன் திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.