விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர திரைப்படம் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. சுவாரஸ்யமான கதைக்களம் மற்றும் சிறப்பான நடிப்பு இருந்தும் கர திரைப்படம் கமர்சியலாக க்ளிக் ஆகவில்லை. கர படத்தின் மூன்று நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ள நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் முதல் நாள் வசூலை கர திரைப்படம் 3 நாட்களுக்குப் பின் எட்டியுள்ளது.

Continues below advertisement

தமிழ் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் கவனமீர்த்த நடிகராக தனுஷ் இருந்து வருகிறார். 50 படங்களை கடந்து நடித்து வரும் தனுஷ் சினிமாவில் தனக்கென ஒரு மாஸை உருவாக்கி வைத்திருக்கிறார். ஆனால் சமீப காலங்களில் தனுஷ் மாறுபட்ட கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். இந்த படங்களில் தனுஷின் நடிப்பு பாராட்டப்பட்டாலும் கமர்சியலாக இந்த படங்கள் பெரிய வெற்றிபெற தவறவிடுகின்றன.

கர 3 நாள் வசூல் 

தனுஷ் அண்மையில் நடித்த குபேரா , இட்லி கடை (அவரே இயக்கியது) ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது கர திரைப்படமும் இதே பிரச்சனையை சந்தித்து வருகிறது . கர திரைப்படம் முதல் நாளில் ரூ6.20 கோடி வசூல் செய்தது. தொடர்ந்து இரண்டாவது நாளில் ரூ6.95 கோடி வசூல் செய்தது. மூன்றாவது நாளில் படத்தின் வசூல் ரூ 5.20 கோடியாக குறைந்தது. மொத்தம் மூன்று நாட்களில் கர திரைப்படம் இந்தியளவில் 18.35 கோடியும் , உலகளவில் 28.87 கோடியும் வசூல் செய்துள்ளது 

Continues below advertisement

பராசக்தி முதல் நாள் வசூல் 

இந்த ஆண்டு பெரிய ஸ்டார்களின் படங்கள் அதிகம் வெளியாகவில்லை. ஆண்டின் தொடக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படம் வெளியானது. இப்படம் முதல் நாளில் உலகளவில் 27.8 கோடி வரை வசூல் செய்தது. சிவகார்த்திகேயனை விட சீனியர் நடிகரான தனுஷின் கர திரைப்படமும் கிட்டதட்ட இதே வசூலை 3 நாட்களில் எட்டியுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் பெரும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளார்கள். தனுஷ் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுப்பதை விட்டு இனிமேல் கமர்சியல் ரீதியாக வெற்றிபெறும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.