Cinema Headlines August 8 :மீண்டும் ஹாலிவுட்டில் தனுஷ்... குமுறும் பிரியா பவானி ஷங்கர்... இன்றைய சினிமா செய்திகள்

Cinema Headlines August 7 : ரூஸோ பிரதர்ஸின் அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டேவில் இணைய உள்ளார் நடிகர் தனுஷ் என்ற தகவல் வெளியாகியுள்ளது. படம் தோல்வி அடைந்தால் ட்ரோல்களால் குமுறுகிறார் பிரியா பவானி ஷங்கர்.

Continues below advertisement

அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டேவில் தனுஷ் :

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான 50வது படமான 'ராயன்' படத்தை அவரே இயக்கி நடித்து இருந்தார். அப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் இந்த சூழல் தனுஷ் பற்றிய புதிய அப்டேட் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பான் இந்திய நடிகராக மட்டுமல்லாமல் ரூஸோ பிரதர்ஸ் இயக்கிய 'தி கிரே மேன்' படத்திலும் நடிகர் தனுஷ் நடித்திருந்தார். அப்படத்தில் ஒரு சிறிய காட்டிச்சியில் மட்டுமே நடித்திருந்தாலும் அவரின் நடிப்பு பாராட்டை பெற்றது. 

Continues below advertisement

அந்த வகையில் உலகெங்கிலும் மிகவும் பிரபலமான ரூஸோ பிரதர்ஸின் அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்  ரசிகர்களை வெறித்தனமாக கொண்டாட வைத்துள்ளது. 

மீண்டும் அஜித் - த்ரிஷா :

தமிழ் சினிமாவின் மிகவும் கியூட் ஆன் ஸ்க்ரீன் ஜோடியான அஜித் - த்ரிஷா பேர் ஏற்கனவே ஜி, கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர். ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர்களின் கூட்டணி மீண்டும் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் 'விடாமுயற்சி' படத்தில் இணைந்துள்ளது. அதுவே ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைய இருக்கும் சமயத்தில் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்  நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்திலும் அஜித் ஜோடியாக நடிகை த்ரிஷா இணையவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் அவர்களின் காம்போ ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிமான்டி காலனி 2 புரொமோஷன் :

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற டிமான்டி காலனி படத்தின் இரண்டாவது பாகம் 9 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ளது. திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் சூழலில் சற்று வித்தியாசமாக படக்குழுவினர் பேருந்து மூலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு படத்தை விளம்பரப்படுத்த உள்ளனர். இந்த பேருந்து சுற்றுப்பயணம் நாளை தொடங்கி திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சென்னை என ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. முழுக்க முழுக்க பேய் படம் என்பதால் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்கில் காண மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

'சாலா' ட்ரைலர் :

தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக திகழ்வது பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் கீழ் T.G. விஷ்வபிரசாத் தயாரிப்பில், விவேக் குச்சிபொட்லா இணை தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ்.டி. மணிபால் இயக்கத்தில் நேரடியாக தமிழில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் 'சாலா'. அறிமுக நடிகர்கள் தீரன், ரேஷ்மா வெங்கடேசன் லீட் ரோலில் நடிக்க சார்லஸ் வினோத், அருள்தாஸ், ஸ்ரீநாத், சம்பத்ராம், மற்றும் ஐடி அரசன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வட சென்னையில் உள்ள பிரபல மதுபானக் கூடத்திற்கு இரண்டு துருவங்கள் மோதிக் கொள்ளும் போராட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இதன் ட்ரைலரை இன்று வெளியிட்டார் தெலுங்கு திரையுலகின் ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜுன்.  

பிரியா பவானி ஷங்கர் குமுறல் :

செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரை நடிகையாகி இன்று வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். கடைக்குட்டி சிங்கம் , மான்ஸ்டர், ஓ மணப் பெண்ணே உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ள பிரியா பவானி ஷங்கர், கமலின் 'இந்தியன் 2' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இன்னும் சில தினங்களில் அவர் லீட் ரோலில் நடித்துள்ள 'டிமான்டி காலனி 2' வெளியாக உள்ளது. சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணலில் பேசுகையில் இந்தியன் 2 படத்திற்கு பிறகு ஏராளமான பட வாய்ப்புகள் வர தொடங்கின. 

ஹீரோவுடன் சேர்ந்து டூயட் ஆடினால் தான் ஹீரோயினாக எடுத்துக் கொள்கிறார்கள். அதைப்பற்றி எனக்கு எந்த வித வருத்தமும் இல்லை. நான் நடித்த படங்கள் வெற்றிபெற்றால் அது என்னால் தான் என்று யாரும் என்னிடம் வந்து பாராட்டவில்லை. ஆனால் ஒரு படம் தோல்வி அடைந்தால் அதற்கான மொத்த பழியையும் என் மேல் சுமத்துவார்கள். அப்படி சொல்லும் போது வலிக்கதான் செய்யும். ஆனால் என் படங்கள் வெற்றி பெற்ற போது அதை நான் தலையில் ஏற்றிக் கொள்ளவில்லை அதே போல் தோல்வியின் போது அது என்னுடைய பொறுப்பு மட்டும் இல்லை என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன் என்றார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola