இட்லி கடை
ராயன் , நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தைத் தொடர்ந்து தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை . நித்யா மேனன் , ராஜ்கிரண் , அருண் விஜய் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். டான் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ஏப்ரல் 10 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
இட்லி கடை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மீதமிருப்பதவாகவும் படத்தில் அனைத்து நடிகர்களும் இணைந்து நடிக்க வேண்டிய சூழல் இருப்பதால் அனைவரின் கால் ஷீட்டிற்காக காத்திருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இட்லி கடை படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.