இட்லி கடை ஆடியோ லாஞ்ச்
டான் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. ராஜ்கிரண் , நித்யா மேனன் , அருண் விஜய் , ஷாலினி பாண்டே , சமுத்திரகனி , சத்யராஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இட்லி கடை படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் நடிகர் தனுஷின் மேலாளர் ஷ்ரேயஸ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தைரியம் இருந்தால் நேருக்கு நேர் மோது
" நீங்க எல்லா மொழியிலும் படம் பண்ணிட்டீங்க. நடிச்சா மட்டும் போதாது கொஞ்சம் ஐடியும் கத்துக்கனும். அவரு தலைவருக்கு அவர் சொன்னது தான் . ஒருத்தன் பத்து பேரை எதிர்த்தா அவன் வீரன். பத்து பேர் சேர்ந்து ஒருத்தனை எதிர்த்தா அவன் தலைவன். பிரபலமாக ரென்டே வழிதான் இருக்கு. ஒன்று ரத்தம் சிந்தி வியர்வை சிந்தி டாப்பில் போய் உட்காரனும். இன்னொன்று டாப்பில் இருப்பவர்களைப் அடிக்கனும் . உங்களால் வளர்ந்தவர்கள்., நீங்கள் வாழ்க்கை கொடுத்தவர்கள் எல்லாம் தைரியமாக நேருக்கு நேர் மோதினால் ஓக்கே. அதைவிட்டு ஒரு கம்ப்யூட்டர் பின்னால் உட்கார்ந்து கொண்டு மோதக்கூடாது. தலைவர் சொன்னது மாதிரி தனுஷ் நீங்க நல்லவரா இருங்க ரொம்ப நல்லவரா இருக்காதீங்க."
இட்லி கடை பற்றி நித்யா மேனன்
இட்லி கடை படத்தில் நாயகியாக நடித்துள்ள நித்யா மேனன் பேசியபோது " இந்த படம் எனக்கு ஒரு அழகான பயணமாக இருந்தது. நான் ஒரே நேரத்தில் பரோட்டா கடையிலும்(தலைவன் தலைவி) இட்லி கடையிலும் மாறி மாறி நடித்தேன். இந்த படம் முழுக்க உணர்வுகளால் நிறைஞ்சிருக்கு. இதில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி தனுஷ்' என பேசினார்
இட்லி கடை பற்றி நடிகர் சத்யராஜ்
இட்லி கடை படம் பற்றி நடிகர் சத்யராஜ் பேசுகையில் " இது ஒரு அர்த்தமுள்ள படம். படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி எல்லாருக்கும் பிடிக்கும். நான் எதிர்பார்த்ததை விட என்னுடைய கதாபாத்திரம் நன்றாக வந்திருக்கிறது. தனுஷின் சிரிப்பு எனக்கு ரொம்பவும் பிடிக்கும் " என கூறினார்.