தவெக தலைவர் விஜயின் சுற்றுப்பயணத்தில் பொது சொத்துக்கள் சேதம், வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மக்களை எப்படி சந்திக்க முடியும் என்று அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய் சுற்றுப்பயணம்:
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தனது அரசியல் சுற்றுப்பயணத்தை நேற்று(செப்-13) திருச்சியில் தொடங்கினார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து தான் பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு வந்து சேர விஜய்க்கு 6 மணி நேரத்திற்க்கும் மேலானது.
அதன் பின் மக்களிடத்தில் பேசிய விஜய் திமுக அரசு கொடுத்த 505 வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளதா என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். விஜய்யின் விமர்சனத்துக்கு திமுக அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அமைச்சர் ரகுபதி பதிலடி:
இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ரகுபதி “விஜய்யின் வருகையால் திமுகவின் வாக்கு வங்கி பாதிக்க எந்த ஒரு வாய்ப்பும் கிடையாது. தவெக விதிமுறைகளை மீறிய விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும். ஒருவருக்கு ஆபத்து ஏற்பட்டால் எந்த பகுதியாக இருந்தாலும் அவ்வழியாக ஆம்புலன்ஸ் செல்லத்தான் செய்யும்.
ஆம்புலன்ஸை விட்டு கூட்டத்தை கலைக்க வேண்டிய அவசியம் எல்லாம் திமுகவுக்கு கிடையாது. நாங்கள் பாம்பும் விடமாட்டோம் ஆம்புலன்ஸ் விடமாட்டோம் நாங்கள் நேர்மையாக எதையும் சந்திக்கக்கூடிய துணிச்சல் மிக்கவர்கள் தைரியமிக்கவர்கள்.
சட்டம் தன் கடமையை செய்யும்:
2011ல் திடீரென்று தான் திமுகவை ஆதரித்து வடிவேல் பிரச்சாரத்திற்கு வந்தார் எந்த ஒரு விளம்பரமும் கிடையாது. அவருக்கு கூடிய கூட்டம் போல் வேறு எங்கும் கூடவில்லை. அது வாக்காக மாறியதா இல்லை. அதேபோல்தான் தற்போது கூடும் கூட்டமும். விஜயும் வடிவேலும் சினிமா நடிகர்கள்தான். விஜய் சுற்றுப்பயணத்தில் பொது சொத்துக்கள் சேதம், சட்டம் தன் கடமையை செய்யும்.
சனி, ஞாயிறு தான் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் அப்போது விஜய் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மற்ற நாட்கள் எல்லாம் வேலை நாட்கள். அதனால் வேலை நாட்களில் அவர்களை அழைக்க முடியாது விடுமுறை தினத்தில்தான் வாங்க சுற்றுலா செல்லலாம் என்று அழைக்க முடியும். பள்ளி விடுமுறையால் அதிகப்படியான பள்ளி மாணவர்கள் அங்கு கூடினார்கள். பள்ளிக்கூடத்து மாணவர்களை எல்லாம் அழைத்து வந்து கூட்டத்தை காண்பிக்க வேண்டிய பரிதாப சூழல்தான் அவருக்கு இருக்கிறது.
திமுக மீது மக்களின் நம்பிக்கை
திமுக நம்பிக்கை மோசடி செய்கிறது என்பது விஜயின் கூற்று. ஆனால் எங்கள் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது தொடர்ந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் 12 தேர்தல்களிலும் வெற்றி பெற்று அதன் மூலம் மக்களின் நம்பிக்கையுடைய தலைமை என்பதை மக்களை சந்தித்து தேர்தல் மூலம் நிரூபித்துக் கொண்டு இருக்கிறார். இதுபோல் மக்களை சந்தித்து நிரூபித்த தலைவர் இந்தியாவிலேயே வேறு யாருமில்லை