தனுஷ் அளித்த பதிலால் ஹாலிவுட் பத்திரிகையாளர்கள் சிரிப்பலையில் மூழ்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


அவெஞ்சர்ஸ் இன்பினிட்டிவார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம் கேப்டன், கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜோய் ருசோ, ஆண்டனி ருசோ (  ருஸ்ஸோ பிரதர்ஸ்) இயக்கத்தில் இருக்கும் திரைப்படம்  ‘ தி கிரே மேன்’. இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதன் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் தனுஷ். இவருடன் கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.  


இந்தப்படத்தின் முதல் காட்சி அமெரிக்காவில் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தனுஷ் உட்பட படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் கலந்து கொண்டனர். அப்போது தனுஷிடம்  ருசோ பிரதர்ஸ் இயக்கத்தில் ஹாலிவுட்டில் அறிமுகமானது எப்படி இருக்கிறது என்று  கேட்கப்பட்டது.


 






அதற்கு பதிலளித்த தனுஷ், “ இந்தப்படத்திற்கு நான் எப்படி தேர்வானேன் என்பதே தெரியவில்லை” என்று கூறினார். இதைக்கேட்ட மொத்த அரங்கமும் சிரிப்பலையில் மூழ்கியது. மேலும் பேசிய தனுஷ், “ காஸ்டிங் ஏஜன்சி என்னை தொடர்பு கொண்டு, ஹாலிவுட் படம் ஒன்று இருக்கிறது என்றனர்... நான்  ஓகே என்றேன்...


 


 






இது மிகப் பெரிய படம் என்றார்கள்.. அதற்கும் நான் ஓகே என்றேன்... உடனே அதில் நடிப்பதற்கு உங்களின் அனுமதி வேண்டும் என்றார்கள்... நான் என்ன படம் என்று கேட்டேன்.. ஆனால் அதற்கு அவர்கள் பதில் சொல்லாமல், தொடர்ந்து இது பெரிய படம் என்றார்கள்.. நான் ஒப்புக்கொள்ள வில்லை.. உடனே அவர்கள் பெருமூச்சு விட்டனர்” என்றார்.  தொடர்ந்து பேசிய தனுஷ், “  ருசோ பிரதர்ஸில் பெரிய ஃபேன்” என்றார்.  


ஜூலை 15 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் இந்தப்படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.