தனுஷ் மீது நயன்தாரா விமர்சனம்


நடிகை நயன்தாரா  நடிகர் தனுஷ் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்து பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தின் 3 நொடி காட்சிகளை பயண்படுத்தியதற்காக தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டதாக நயன்தாரா தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனையில் தற்போது சிவகார்த்திகேயன் ரசிகர்களும் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். சிவகார்த்திகேயனி வளர்ச்சியை தனுஷ் தடுக்க முயன்றதாக பல்வேறு வீடியோக்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். தனுஷ் படத்தில் நடித்த பிரபல நடிகைகள் நயன்தாராவின் கருத்திற்கு ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் தனுஷ் ரசிகர்கள் நயன்தாராவை திருப்பித் தாக்கத் தொடங்கியுள்ளார்கள்.


நயன்தாராவை தாக்கத் தொடங்கிய தனுஷ் ரசிகர்கள்


பலர் தனுஷ் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி வரும் நிலையில் தனுஷ் ரசிகர்கள் நயன்தாரா மீது கீழ்வரும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.


" நயன்தாரா தனது திருமணம் பற்றி ஆவணப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ்க்கு பெரிய தொகை ஒன்றுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டார். ஆனால் நானும் ரவுடி தான் படப்பிடிப்பு காட்சிகள் இல்லாமல் ஆவணப்படம் திருபதியாக இல்லை. இதனால் தனுஷிடம் அனுமதி கேட்டுள்ளார் நயன்தாரா. ஏற்கனவே நானும் ரவுடிதான் படத்தால் தனுஷூக்கு நஷ்டம் ஏற்பட்டதால் அவர் ஃபுட்டேஜ் வழங்க அனுமதி தரவில்லை. சட்டரீதியாக தனுஷை எதிர்கொள்ள முடியாத நயன் தனுஷின் தனிப்பட்ட கேரக்டரை பகடையாக பயன்படுத்த முடிவு செய்திருக்கிறார். மேலும் தனது ஆவணப்படம் வெளியாவதற்கு இந்த சர்ச்சை பெரிய ப்ரோமோஷனாக அமையும் என்பதால் இப்போது இந்த பிரச்சனையை அவர் வெளியே கொண்டு வந்திருக்கிறார்" 



" மற்ற படங்களில் நடித்துவிட்டு அந்த படங்களுக்கு ப்ரோமோஷனுக்கு கூட நயன் செல்வதில்லை. கேட்டால் அதற்கு அக்ரீமெண்ட் போடவில்லை என்று சொல்வார். ஆனால் தான் நடித்த படங்களுக்கு மட்டும் அவர் ப்ரோமோஷன் செய்கிறார். இது எந்த வகையில் நியாயம். உங்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா" என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.