நயன்தாரா


நடிகை நயன்தாரா நடிகர் தனுஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தை நடிகர் தனுஷின் வண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்தது. நயன்தாராவின் ஆவணப்படத்திற்காக நானும் ரவுடிதான் படத்தின் பி.டி.எஸ் காட்சிகளை பயன்படுத்த கடந்த 2 ஆண்டுகளாக தனுஷ் அனுமதி கேட்டு மறுத்துவிட்டதாகவும் 3 நொடி காட்சி ஒன்றை பயண்படுத்தியதற்காக தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாகவும் இந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். 


தனுஷை ஜெர்மன் வார்த்தையால் திட்டிய நயன்தாரா


மேலும் அடுத்தவர்களின் வளர்ச்சியைப் பார்த்து நடிகர் தனுஷ் பொறாமைப்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை நயன்தாரா வைத்துள்ளார் " பிஸ்னஸ் ரீதியான காரணங்களுக்கு நீங்கள் அனுமதி வழங்கவில்லை என்றால் கூட பரவாயில்லை ஆனால் எங்கள் மீதான தனிப்பட்ட வன்மத்தை வெளிப்படுத்தவே நீங்கள் இந்த அனுமதி வழங்கவில்லை. உங்கள் படத்தின் ஆடியோ லாஞ்சில்  அப்பாவியான ரசிகர்கள் மத்தியில் நீங்கள் போதிக்கும் விஷயங்களில் கொஞ்சமாவது நீங்கள் பின்பற்றியிருக்கலாம். உங்களுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த நானும் ரவுடிதான் படத்தைப் பற்றி மோசமாக பேசியது எல்லாம் எனக்கு நினைவில் இருக்கிறது. உங்கள் அடுத்த படத்தின் இசை வெளியீட்டில் நீங்களே போலியான கதைகளை உருவாக்கி பஞ்சு டயலாக் மாதிரி அதை பேசலாம். ஆனால் கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். 


ஜெர்மன் மொழியில் ஒரு வார்த்தையை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். Schadenfreude (அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காண்பவர்). இனிமேல் எங்கள் துன்பத்தில் அல்லது வேறு யாருடைய துன்பத்திலும் நீங்கள் இந்த இன்பத்தை ருசிக்க முடியாது என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். இன்னொரு மனிதனை கீழாக பார்க்கும் இந்த உலகத்தில் ஒருவரின் வெற்றியில் இன்பத்தையும் பார்க்கலாம். மற்றவர்களின் மகிழ்ச்சியைப் பார்த்து நாமும் அதில் இருந்து நம்பிக்கையை எடுத்துக்கொள்ள முடியும். அது தான் என்னுடைய ஆவணப்படத்தின் நோக்கமும். இந்த ஆவணப்படத்தை நீங்களும் பார்த்து கற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்" என நயன்தாரா தெரிவித்துள்ளார்