தமிழ் திரையுலகின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் தனுஷ். தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடித்தவர். நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.
ராயனுக்கு தேசிய விருது:
இவரது நடிப்பில் வெளியாகிய ராயன் படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டுக்கான சிறந்த படத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டிருப்பதற்கு பலரும் கண்டனத்தை தெரிவித்தனர். அந்தாண்டு அதைவிட பல சிறந்த படங்கள் வெளியாகியதாகவும், அந்த படங்களுக்கு அளிக்கப்படாமல் ராயனுக்கு அளித்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தனுஷ் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியதாவது,
ராயனை விட தகுதியான படங்கள்:
ராயன் படத்திற்கு தேசிய விருது கிடைச்சது. அந்த வருடம் அந்த படத்தை விட தகுதியான பல படங்கள் நிச்சயமா இருக்குது. அந்த படங்களின் ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். அதை நான் முழுமையாக மதிக்கிறேன். இப்போது, அது ஒரு கனாக்காலம் வெளியானது.
அப்போது நான் சின்ன பையன். தேசிய விருது கிடைக்கும்னு சொன்னாங்க. நானும் சின்னபையங்குறதால ஆசையாக காத்திருந்தேன். புதுப்பேட்டைக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும்னு சொன்னார்கள். எல்லாரும் சொன்னார்கள். நீங்களும் சொன்னீர்கள். ஆனால், எனக்கு கிடைக்கவில்லை.
தட்டிக்கொடுங்கள்:
அதன்பிறகு 3, மயக்கம் என்ன, மரியான், ராஞ்சனா, வட சென்னை, கர்ணன். ஒரு சில விஷயங்கள் எவ்ளோதான் முயற்சி பண்ணாலும் தானாதான் அமையும். அது மாதிரி எனக்கு அமைஞ்சது. அந்த படம் எப்படியோ? அந்த படத்திற்கான எங்களுடைய உழைப்பு உண்மையான உழைப்பு. ஒரு தமிழராக எனக்கு 2 தேசிய விருது கிடைச்சுருக்கிறது. தட்டிவிடாதீர்கள், தட்டிக்கொடுங்கள்.
அஜித் சொன்ன மாதிரி நீயா தோற்றுவிட்டாய் என்று ஒத்துக்கொள்ளும் வரை உன்னை யாராலும் தோற்கடிக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
விமர்சனம்:
நடிகர் தனுஷ் நடிப்பில் ஓம் படம் உருவாகி வருகிறது. மேலும் வெற்றி மாறன் இயக்கத்தில் தமிழ் முருகன் படத்தில் நடிக்க உள்ளார். தனுஷ் மிகச்சிறந்த நடிகர் என்றாலும் ராயன் படம் பெரியளவு வரவேற்பை பெறவில்லை. அவரே இயக்கி நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இதன் காரணமாகவே இந்த படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டதற்கு ரசிகர்கள் வரவேற்பும் தெரிவிக்கவில்லை.
