லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த  ‘தி கிரே மேன்’ பிரீமியருக்கு மகன்களை அழைத்து சென்றது ஏன் என்பது குறித்து தனுஷ் பேசியிருக்கிறார். 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடைபெற்ற  ‘தி கிரே மேன்’ பிரீமியர் நிகழ்ச்சியில் தனது மகன்களுடன் கலந்து கொண்டார். இந்தப்புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானது.


 






அது குறித்து அவர் பேசும் போது, “அவர்களுக்கு நான் எது செய்தாலும் பிடிக்கும். ஏனென்றால் அவர்கள் எனது மகன்கள். விமர்சனம் செய்தால் கூட, அவர்கள் எனக்கு பாசிட்டிவான வழியிலேயே விமர்சனம் செய்வார்கள். என் மகன்களே எனக்கான பிடிப்பு. அது எனக்கு உலகத்தை உணர்த்தியது. அவர்கள் என்னுடன் அங்கிருந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அவர்கள் அங்கிருந்ததை விட பெரிய விஷயம் எதுவும் இருக்காது.” என்று பேசினார். 






முன்னதாக, அவெஞ்சர்ஸ் இன்பினிட்டிவார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம் கேப்டன், கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜோய் ருசோ, ஆண்டனி ருசோ (  ருஸ்ஸோ பிரதர்ஸ்) இயக்கத்தில் இருக்கும் திரைப்படம்  ‘ தி கிரே மேன்’. இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதன் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் தனுஷ். இவருடன் கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் இன்று நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடித்தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.