தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தான் 'ராயன்'. தனுஷின் 50-ஆவது படமாக வெளியான இந்த  அவரே, இயக்கி நடித்திருந்தார். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்கு பிறகு 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தை தன்னுடைய அக்கா மகன் பவிஷை ஹீரோவாக வைத்து  இயக்கியிருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனத்தை எதிர்கொண்டது மட்டும் இன்றி படு தோல்வியை சந்தித்து.

Continues below advertisement


நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது, தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'குபேரா' படம் அடுத்ததாக  திரைக்கு வர தயாராகியுள்ளது. இயக்குநர் சேகர காமுழா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, சுனைனா உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த படம் உருவாகி உள்ளது. முழுக்க முழுக்க சோஷியல் த்ரில்லர் கதையை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.




தேவி ஸ்ரீ பிரசாத் 'குபேரா' படத்திற்கு இசையமைத்துள்ளார். அமிகோஸ் கிரியேசன்ஸ் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. ரூ.120 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கிறது. வரும் ஜூன் 20ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது.


தனுஷ் வித்தியாசமான ரோலில் நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தனுஷின் 51ஆவது படம் ஆகும். ஏற்கனவே இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள 'போய்வா நண்பா' பாடலின் முதல் சிங்கிள் டிராக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் படத்தின் ரிலீசுக்கு முன்பே, இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ கைப்பற்றியுள்ளது.




இந்த நிலையில் தான் இந்தப் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு, படம் வெளியாக இன்னும் 45 நாட்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. அதோடு படம் தொடர்பாக புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் ராஷ்மிகா மந்தனா மற்றும் தனுஷ் இருவரும் இடம் பெற்றுள்ளனர். 
இந்தப் படத்திற்கு பிறகு இயக்குநர ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தில் நடிக்கிறார். ஹாலிவுட் படமான ஸ்டிரீட் ஃபைட்டர் படமும் வெளியாக இருக்கிறது. இட்லி கடை வரும் அக்டோபர் 1ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என்று எல்லாமே தனுஷ் தான். தேரே இஸ்க் மெயின் என்ற படமும் வெளியாக இருக்கிறது. இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்திலும் தனுஷ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.