74 வயசுல ரஜினி இப்படி பண்ணலாம்... 41 வயசுல தனுஷ் பண்ண கூடாது? எல்லாத்துக்கும் காதல் தான் காரணம்!

வயசான காலத்துல ரஜினியே பண்ணும் போது 41 தான் ஆகுது, தனுஷ் பண்ண கூடாதா என்பது இப்போது அவரது ரசிகர்களோட கேள்வியாக உள்ளது. அப்படி என்ன தனுஷ் பண்ணுறாரு தெரியுமா?

Continues below advertisement

ரஜினியின் முத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு தனுஷின் டிரேட் மார்க் மாறியது. அவரை பலரும் ரஜினியின் மருமகன் என்றே அழைக்க தொடங்கினர். திருமணத்திற்கு பிறகு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று 2 மகன்கள் பிறந்தனர். திருமணத்திற்கு பின் 18 வருடம் ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி, கடந்த ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

Continues below advertisement

இந்த பிரிவுக்கு முக்கிய காரணமே மாமனாரின் ஏரியாவான போயஸ் கார்டனிலேயே தனுஷ் புதிதாக வீடு கட்டியது மட்டுமின்றி அந்த வீட்டை ஐஷுவுக்கு கொடுக்காமல் தனுஷ் அப்பா - அம்மவுக்கு கொடுத்தது தான் என ஒரு தரப்பு சொல்ல, இன்னொரு தரப்பு தனுஷ் கோடிகளில் கடன் வாங்கி இந்த வீட்டை காட்டியுள்ளதால் ஏற்பட்ட கடன் தொகை என்றும் கூறப்பட்டது.


ஆனால் தனுஷ் - ஐஸ்வர்யா இருவருமே தற்போது வரை விவாகரத்து குறித்து, ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்த நிலையில் தான் இப்போது தனுஷ் மற்றும் ரஜினிகாந்திற்கு இடையில் மறைமுகமாக யுத்தம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அது சினிமாவை யார் அதிகமாக காதலிக்கிறார் என்பதுதானாம். 

ரஜினிகாந்த் தனக்கு 74 வயதானாலும் அதைப் பற்றியெல்லாம் கவலையில்லாமல் ஒரு படம் நடித்து முடித்த கையோடு அடுத்தடுத்து பட வேலையை தொடங்கி விடுகிறார். இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு பின்னர் ஜெயிலர் 2 மற்றும் ரஜினிகாந்த் 173 ஆகிய படங்களில் நடிக்க இருக்கிறார். ரஜினியின் 173ஆவது படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

இதே போன்று தான் தனுஷ் ஏற்கனவே கைவசம் ஏராளமான படங்கள் வைத்திருக்கிறார். ராயன் படத்திற்கு பிறகு குபேரா, இட்லி கடை, தேரே இஸ்க் மெயின் மற்றும் டி55 ஆகிய படங்களில் பிஸியாக இருக்கும் தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை இயக்கியும் வருகிறார். ஒரு படத்தை முடித்துவிட்டு ரெஸ்ட் எல்லாம் எடுப்பது கிடையாதாம். பம்பரமாக சுற்றிக் கொண்டு நடிக்கிறார், படம் இயக்குகிறார் இப்படி பிஸியாகவே இருக்கிறார்.


சினிமா மீது அளவுகடந்த காதல் வைத்திருக்கிறார். அதனால், தான் இப்படி ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். 74 வயதான ரஜினியே சினிமாவை இந்த அளவுக்கு காதலிக்கும் பொது, ஜஸ்ட் 41 வயசே ஆகும் ஆகும் தனுஷ் அடுத்தடுத்து சினிமாவை காதலித்து அதன் பணிகளில் ஈடுபடுவதில் தப்பு இல்லையே என்பதே தனுஷ் ரசிகர்களின் வாதம்.  தனுஷ் இயக்கி முடித்துள்ள, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இந்த வாரம் ரிலீஸ் ஆக உள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola