தனுஷ் மிருணாள் டேட் செய்வது உண்மையா ? 

நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணால் தாகூர் டேட் செய்வது வருவதாக கடந்த சில நாட்களாக காட்டுத்தீப் போல் தகவல் பரவி வருகிறது. மிருணால் தாகூர் நடித்துள்ள சன் ஆஃப் சர்தார் படத்தின் சிறப்பு திரையிடலுக்கு தனுஷ் மும்பை சென்றது முதல் இந்த தகவல் பரவி வருகிறது. தனுஷ் அண்மையில் முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவுடன் விவாகரத்து பெற்ற நிலையில் மிருணால் தாகூரை அவர் டேட் செய்வது குறித்த எந்த வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை. ஆனால் இந்த தகவல் உண்மைதான் தான் என நெருங்கிய சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது நியூஸ் 18 பத்திரிகையாளர் தெரிவித்துள்ளபடி தனுஷ் மிருணாள் தாகூர் டேட் செய்து வருவதாகவும் ஆனால் இருவரும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார். அதே நேரம்  பொதுவிடங்களிலும் சினிமா நிகழ்ச்சிகளிலும்  இருவரும் இணைந்து கலந்துகொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யார் இந்த மிருணாள் தாகூர்

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பிறந்த மிருணாள் தாகூர் அங்கேயே பள்ளி கல்லூரி படிப்பை முடித்தார். படித்துக் கொண்டிருக்கும் போதே தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்தது. பல்வேறு மராத்தி மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்த மிருணாள் தாகூர் 2022 ஆம் ஆண்டு வெளியான சீதா ராமம் படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே கவனமீர்த்தார். தொடர்ந்து இந்தி , தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். 

தனுஷ் விவாகரத்து

நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இரு மகன்கள் உள்ளார்கள். கடந்த 2022 ஆம் ஆண்டு தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவுடனான விவாகரத்தை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து 2024 நவம்பர் மாதம் இருவருக்கும் அதிகாரப்பூர்வ விவாகரத்து வழங்கப்பட்டது. மகன்களின் படிப்பு மற்றும் இதர பொருளாதார செலவுகளுக்கு இருவரும் பொறுப்பெடுத்துள்ளார்கள்.