சூப்பர் ஸ்டார் வீட்டின் மருமகனாக தனுஷ் நுழைந்தபோது, விமர்சனம் செய்யாத நபரே இருக்க முடியாது. இன்று போல் அன்று சமூக வலைதளங்கள் இல்லையென்றாலும், இந்த விவகாரம் நாளிதழ்கள், வார இதழ்களில் அவ்வளவு கிசுகிசுக்கப்பட்டது. அந்த அளவிற்கு தனுஷ்--ஐஸ்வர்யா காதல் திருமணம் ஃபேமஸ். 18 ஆண்டுகளுக்குப்பின் அவர்கள் பிரிந்திருக்கிறார்கள். 




ரஜினி மாப்பிள்ளையாக தனுஷ் மாறிய பின், அவருக்கு மகனாகவே அவர் இருந்திருக்கிறார். அதாவது மகனுக்கான மரியாதைகள் ரஜினி வீட்டில் கிடைத்தது. ரஜினிக்கு ஆண் வாரிசு இல்லை என்பதால், ரஜினியில் திரை வாரிசாக தனுஷ் அறிவிக்கப்படாத வாரிசாக செயல்பட்டார். ரஜினியின் முந்தைய படங்களின் பெயரை பயன்படுத்துவது உள்ளிட்ட பல சலுகைகளை அவர் பெற்றார். ஆனாலும் அவரின் வளர்ச்சி, அவர் உழைப்பால் மட்டுமே கிடைத்தது. 



ரஜினியின் எல்லா நிகழ்ச்சிகளிலும் தனுஷ் உடன் இருந்திருக்கிறார். அதற்கு காரணம், தனுஷுக்கு தரப்பட்ட முக்கியத்துவம். சமீபத்தில் தேசிய விருது பெரும் நிகழ்வில், ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது தரப்பட்டது. தனுஷிற்கு அசுரன் படத்திற்காக தேசிய விருது வழங்கப்பட்டது. டெல்லியில் நடந்த நிகழ்வில் ரஜினி, ரஜினி மனைவி லதா, தனுஷ், தனுஷ் மனைவி ஐஸ்வர்யா உள்ளிட்டோர் குடும்பமாக பங்கேற்றனர். 


ரஜினி விருது வாங்கும் போது தனுஷ் உள்ளிட்டோரும், தனுஷ் விருது வாங்கும் போது ரஜினி உள்ளிட்டோரும் கரகோஷம் எழுப்பி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்விற்கு பின் ஐஸ்வர்யா தனுஷ், தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், மகளாகவும், மனைவியாகவும் தான் பெருமை கொள்வதாக குறிப்பிட்டிருந்தார். அதாவது, ரஜினியின் மகளாகவும், தனுஷின் மனைவியாகவும் தான் பெருமை கொள்வதாக அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். 






 


இந்த பதிவு போடப்பட்டது. கடந்த 2021 அக்டோர் 25 ம் தேதி. அடுத்த நவம்பர், டிசம்பர், தற்போது ஜனவரி என 3 மாதங்கள் கூட நிறைவு பெறாத நிலையில் தான், தான் தனுஷை விட்டு பிரிவதாக அதே இன்ஸ்டா பக்கத்தில் ஐஸ்வர்யா குறிப்பிட்டுள்ளார். மண வாழ்க்கை எவ்வளவு எளிதில் முடிவு பெறுகிறது என்பதற்கு இவர்களும் உதாரணமாகிவிட்டனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண