பிரபல திரைப்பட நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தங்கள் பதினெட்டு ஆண்டுகால திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர். விரைவில் இருவரும் நீதிமன்றத்தை நாடி, தங்கள் விவாகரத்தைப் பெற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


21ம் நூற்றாண்டில், குடும்ப வாழ்க்கை  என்பது நிலையில்லாததாக உள்ளது. குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரையில் அடுத்ததாக என்ன நடைபெறும்? எங்கெல்லாம் புதிய முரண்பாடுகள் உருவாகும்? எப்படியெல்லாம் இடைவெளிகள் சுருங்கும்? என்று கணிக்க முடியாது தெரியாது.  எவ்வாறாயினும்,  வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கு ஓவ்வொரு தம்பதிகளும் தயாராக இருக்க வேண்டும். 


சமீப நாட்களில், பலருக்கும் அதிர்ச்சியளித்த பிரபகலங்களின் விவாகரத்து குறித்தும், அதை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதையும் குறித்தும் கீழே காணலாம். 


சமந்தா, நாக சைதன்யா ஜோடி: கடந்த ஆண்டின் பாதியிலிருந்தே சமந்தா, நாக சைதன்யா பிரிவு பற்றி ஊடகங்களில் அன்றாடம் யூக செய்திகள் வந்து கொண்டே இருந்தன. சமந்தா தனது குடும்பப் பெயரைத் துறந்தார், சமந்தா நாக சைதன்யாவுக்கு வாழ்த்துச் சொல்லவில்லை. குடும்ப விழாவில் சமந்தா பங்கேற்கவில்லை என சமந்தாவை மையப்படுத்தியே அவர் குடும்ப விரிசல் பற்றி அரசல் புரசலாக செய்திகள் வந்தன. இந்நிலையில் 2017ல் கோவாவில் கோலாகலமாக தொடங்கிய சமந்தா நாக சைதன்யா இல்வாழ்க்கை, 2021ல் ட்விட்டரில் ஒரே ஒரு அறிவிப்பின் மூலம் முடிவுக்கு வந்தது. நாங்கள் பிரிகிறோம் ஆனால் நண்பர்களாக இருப்போம். எங்களின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுங்கள் என்று ஒருமித்து ஒரே செய்தியைப் பகிர்ந்து பிரிந்தனர். 




இமான், மோனிகா ரிச்சர்ட் தம்பதி: சம கால காதலர்களுக்காக கலர்கலராக ட்யூன் கம்போஸ் செய்து கொடுத்த இசையமைப்பாளர் வாழ்க்கையில் இசைவு ஏற்படவில்லை. ஏனோ இல்வாழ்வு கசந்து போக 2020ல் இமானும், மோனிகா ரிச்சர்டும் விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர். நவம்பர் 2020ல் இருவரும் சட்டப்படி பிரிந்தனர். 13 ஆண்டு கால இல்வாழ்க்கையை முறித்துக் கொண்டதை ட்விட்டரில் அறிவித்து தனிப்பட சுதந்திரத்தை மதித்து நடக்குமாறு நெட்டிசன்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.



அமீர்கான் கிரண் ராவ் தம்பதி: சமந்தா, நாக சைதன்யா கதையாவது புகைந்து கொண்டே இருந்தது. ஆனால், அமீர்கான், கிரண் ராவ் கதை அப்படியல்ல. எல்லாம் சரியாகவே சென்றது போல் நமக்குத் தெரிந்தது. 15 ஆண்டுகளாக நடந்த இல்வாழ்க்கையில் அப்படி என்ன சிக்கல் வந்திருக்கக் கூடும் என புருவங்கள் உயர்ந்தன. ஆனால், அமீர்கானும் கிரண் ராவும் தங்கள் முடிவில் தெளிவாக உறுதியாக இருந்தனர். நாங்கள் ஆசாத்துக்கு தொடர்ந்து நல்ல பெற்றோராக இருப்போம் என்று கூறி பிரிந்தனர்.



சுஷ்மிதா சென், ரோமன் ஷால்: சுஷ்மிதா சென், ரோமன் ஷால் பிரிவு விவாகரத்து அல்ல, இவர்கள் முறைப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை. இருவரும் இணைந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி சுஷ்மிதா ரோமன் ஷாலைப் பிரிவதாக அறிவித்தார். நாங்கள் நண்பர்களாகத் தொடங்கினோம். நண்பர்களாகவே இருப்போம். உறவு முறிந்தது. அன்பு மட்டும் எஞ்சியுள்ளது. இனியும் யூகங்கள் வேண்டாம் என்று பதிவிட்டார். 



விவியன் டிசேனா மற்றும் வாபிஸ் டோரப்ஜீ: இந்தப் பெயர் தெற்கே அவ்வளவு பிரபலமாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் தொலைக்காட்சி பிரபலமான இந்த தம்பதியரும் கடந்த ஆண்டு டிசம்பரில் மண முறிவு செய்து கொண்டனர். பியார் கி ஏக் கஹானி சீரியல் ஸ்பாட்டில் சந்தித்து காதலாகி கசிந்துருகி 2013ல் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி 2017 லேயே பிரிவை அறிவித்தது. அப்போதே அவர்கள் விவாகரத்துக்கு விண்ணப்பித்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். 2021 டிசம்பர் அந்த அழகிய ஜோடியைப் பிரித்து வைத்தது.


 



விவியன் டிசேனா மற்றும் வாபிஸ் டோரப்ஜீ


 


கீர்த்தி குல்ஹாரி, சாஹில் ஷேகல்: பிங்க் திரைப்பட நடிகை கீர்த்தி குல்ஹாரி கணவர் ஷாஹில் ஷேகலைப் பிரிவதாக கடந்த ஏப்ரல் 1ல் அறிவித்தார். அந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மனதில் இடியென இறங்கியது.


 



கீர்த்தி குல்ஹாரி, சாஹில் ஷேகல்


நிஷா ராவல், கரண் மெஹ்ரா: குடும்பச் சண்டை காவல் நிலையம் வரை சென்றதே இவர்களின் பிரிவுக்குக் காரணமாக இருந்தது. கணவர் கரணுக்கு திருமணத்தைத் தாண்டிய உறவு இருப்பதாக நிஷா கூறினார். இதனால் தம்பதிகளுக்கு இடையே எப்போது பார்த்தாலும் சண்டை சச்சரவு. ஒருமுறை வாக்குவாதம் கைகலப்பாக மாற, கரண் தன்னைத் தாக்கியதாக நிஷா காவல்நிலையத்தில் புகார் செய்தார். கரண் கைதானார். இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் இருவரும் விவாகரத்து பெற்றனர்.


ஹனிசிங், ஷாலினி சிங்: பிரபல ராப் இசைக் கலைஞர் ஹனி சிங் மீது அவரது மனைவி ஷாலினி சிங் திருமணத்தை மீறிய உறவு, குடும்ப வன்முறைக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 2011ல் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் காதல் அவர்கள் இல்வாழ்க்கையை நீடிக்கச் செய்யவில்லை. ராப் இசையில் கலக்கிய ஹனி சிங் வாழ்க்கை எனும் நாதத்தில் ஸ்ருதியைத் தவறவிட்டார். இருவருக்கும் சட்டப்படி விவாகரத்து கிடைத்தாகிவிட்டது.



நிஷா ராவல், கரண் மெஹ்ரா:




 


நுஷ்ரத் ஜஹான், நிகில் ஜெயின்: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான நுஷ்ரத் ஜஹான் 2019 ஆம் ஆண்டு நிகில் ஜெயின் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த ஆண்டு ஜூன் மாதம் நுஷ்ரத்தே ஓர் அறிவிப்பை வெளியிட்டார். துருக்கியில் நடந்த தனது திருமணம் இந்தியச் சட்டப்படி செல்லாது என்று கூறினார். தனது நகைகள் சொத்துக்களை கணவர் சட்டவிரோதமாக வைத்துள்ளதாகவும் கூறினார். இவர்கள் இன்னும் சட்டப்படி பிரியவில்லை.


அர்னால்டு, மரியா ஷ்ரீவர்: அட உள்நாட்டில் மட்டுமில்லீங்க வெளிநாட்டிலும் விவாகரத்து நடந்துள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்குவார்ஸ்நெகர் தனது மனைவி மரியா ஷ்ரிவரைப் பிரிந்தார். 35 ஆண்டு கால இல்வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்தார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.