தமிழ் சினிமாவில் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி பலரை கொள்ளைக்கொண்டவர் நடிகர் தனுஷ். நடிப்பு அரக்கன் என பிரபலங்களாலேயே கொண்டாடப்படுபரும் கூட, தனுஷுக்கு தமிழ் சினிமாவில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலுm ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் நாளை(ஜூலை 28)  தனுஷின் 38 வது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தனுஷின் தெலுங்கு ரசிகர்கள் வெளியிட்ட காமன் டிபி , இணையத்தை கலக்கி வருகிறது. ரசிகர்கள் தற்போதே தனுஷின் பிறந்த நாளை கொண்டாட தொடங்கிவிட்டனர்.  தனுஷ் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் 100 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்று கோலிவுட்டில் வேறு எந்த ஒரு பெரிய நடிகரும் பெறாத அங்கீகாரத்தை பெற்றார். அதே போல மாரி படத்தில் இடம்பெற்றிருந்த “ரவுடி பேபி” பாடல் 1 பில்லியன் பார்வையாளர்களை உலகின் பல பகுதிகளில் கொண்டாடப்பட்டது. தென்னிந்திய நடிகரின் ஒருவரின் பாடல் பில்லியன் பார்வையாளர்களை கடந்தது இதுவே முதல்முறை. அந்த சாதனையையும் படைத்தவர் நடிகர் தனுஷ். தற்போது இந்த தகவல்களை எல்லாம் திரட்டி தனுஷ் ரசிகர்கள் “ நீங்கள் எங்களின் பெருமை” என ட்வீட் செய்து வருகின்றனர்.






இது ஒரு புறம் இருக்க இன்று காலை 11 மணிக்கு தனுஷின் 43 வது படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ’டி 43’  படத்தில் நடித்து வருகிறார் . இந்த படம் தனுஷின் 43 வது படமாக தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. டி 43 படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரமாக தொடர்ச்சியாக ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்து வருகிறார். ஹீரோ, ஹீரோயினுக்கான முக்கிய காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. விரைவில் டி43 படத்தின் டைட்டில் லுக் மற்றும் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு தனுஷின் டி43 படத்தின் ஃபஸ்ட்லுகை நாளை காலை 11 மணிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.






தனுஷ் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் தவிர தற்போது ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். முன்னதாக  ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நார்வே சர்வதேச திரைப்பட விழாவில் 'The Ray of Sunshine' என்ற விருதை பெற்றது. தற்போது  ’தி கிரே மேன்’ என்னும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு  முன்னர் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.