பொங்கல் நெருங்கியாச்சு!!! புத்தாடை, சர்க்கரை பொங்கல், வழிபாடு என ஒரு பக்கம் பொங்கலோ பொங்கல் என மக்கள் அனைவரும் சந்தோஷத்தில் பொங்கும் நேரத்தில் அனைவரும் மிகவும் ஆவலாக எதிர்பார்ப்பது பொங்கல் ரிலீஸ் திரைப்படங்கள் என்றாலும் அவர்கள் ஒரு வாரத்திற்கு முன்பில் இருந்தே தொலைக்காட்சிகளில் தேடும் ஒரு தகவல் பொங்கலுக்கு என்னென்ன புதிய திரைப்படங்கள் எந்தெந்த தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகப் போகிறார்கள் என்பதுதான்.
பொங்கல் சிறப்பு திரைப்படங்கள்:
பொங்கல் என்றாலே மாஸ் ஹீரோக்களின் திரைப்படங்கள் மட்டுமின்றி பல திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் 2023ம் ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு மற்றும் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனவரி 11ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியானது
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் மற்றும் மாட்டு பொங்கலுக்கு ஏராளமான சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்து தொலைக்காட்சிகளிலும் போட்டி போட்டு கொண்டு ஒளிபரப்பாகும். அதே போல புதிய திரைப்படங்களும் ஒளிபரப்பப்படும். டி.ஆர்.பி ரேட்டிங்கை அதிகரிக்க வரும் பொங்கல் மற்றும் மாட்டு பொங்கல் அன்று என்னென்ன திரைப்படங்கள் ஒளிபரப்பாக போகிறது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சன் டிவி
ஜனவரி 15
காலை 11 மணி - நம்ம வீட்டு பிள்ளை
மதியம் 3 மணி - எதற்கும் துணிந்தவன்
மாலை 6.30 மணி - திருச்சிற்றம்பலம்
ஜனவரி 16
காலை 11 மணி - பேட்ட
மதியம் 3 மணி - தெறி
மாலை 6.30 மணி - லத்தி
ஜனவரி 17
காலை 11 மணி - மிஸ்டர் லோக்கல்
விஜய் டிவி :
ஜனவரி 15
காலை 10.30 மணி - காதுவாக்குல ரெண்டு காதல்
மதியம் 2 மணி - காந்தாரா
மாலை 5.30 மணி - ஆர்.ஆர்.ஆர்
ஜனவரி 16
காலை 10 மணி - ஓ மை டாக்
மதியம் 12,30 மணி - விருமன்
மாலை 4 மணி - விக்ரம்
கலைஞர் தொலைக்காட்சி
ஞாயிற்றுக்கிழமை பொங்கல் (ஜனவரி 15 ) அன்று மதியம் 1.30 மணிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பையும் வசூலையும் வாரி குவித்த பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள 'லவ் டுடே' திரைப்படம் மற்றும் திங்கட்கிழமை மாட்டுப் பொங்கல் (ஜனவரி 16 ) அன்று மதியம் 1.30 மணிக்கு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளன.
ஜீ தமிழ் தொலைக்காட்சி
ஜனவரி 14
மதியம் 3 மணி - மாமனிதன்
ஜனவரி 15
மதியம் 12 மணி - காஃபி வித் காதல்
மதியம் 3.30 மணி - யானை
ஜனவரி 16
காலை 10.30 மணி - கேப்டன்
மதியம் 1 மணி - மை டியர் பூதம்
மதியம் 3.30 மணி - காரி
ஜனவரி 17
காலை 9.30 மணி - கர்ணன்
மதியம் 3.30 மணி - வீட்ல விசேஷம்
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
ஜனவரி 15
பிற்பகல் 2.30 மணி மற்றும் 5.30 மணி - ட்ரிகர்
ஜனவரி 16
பிற்பகல் 2.30 மணி - பஃபூன்
மாலை 5.30 மணி - பாஸ்கர் தி ராஸ்கல்
ஜனவரி 17
மதியம் 1:30 மணி - நித்தம் ஒரு வானம்
பொங்கலை சூப்பர் ஹிட் திரைப்படங்களுடன் மகிழ்ந்து கொண்டாடுங்கள். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.