திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா வேட்டவலம் பூரிக்காரன் தெருவை சேர்ந்த சுந்தர மூர்த்தி மகன் செந்தில்குமார் வயது ( 38). இவர் அந்த பகுதியில் பானிப்பூரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் வசித்து வந்த 17 வயதுடைய மாணவி பள்ளிக்கு 1 மாதம் மட்டும் சென்றுள்ளார். அதன் பிறகு பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். அதன் பிறகு மாணவி செந்தில் குமாரின் பாணிப்பூரி கடையில் பணியாற்றியதாக கூறப்படுகிறது.


மேலும் மாணவி கடையில் பணிகள் முடிந்த பிறகு வீட்டிற்கு சென்று வருகிறார். இந்நிலையில் செந்தில் குமாரின் மனைவி சென்னைக்கு பெற்றுள்ளார். அப்போது மாணவி பணிக்கு வந்துள்ளார், பின்னர் வீட்டில் மனைவி இல்லாததை பயன்படுத்தி செந்தில் குமார் ‌மாணவியை வீட்டிற்கு சென்று பானிபூரிக்கு தேவையான உபகரணங்களை எடுத்து வரக்கூறியுள்ளார். அதன் பிறகு செல்வகுமார் சிறுமியை பின் தொடர்ந்து வீடடிற்குள் மாணவி சென்ற உடன் கதவினை மூடியுள்ளார்.


 




இதனையறிந்த சிறுமி பயந்து செல்வகுமாரிடம் கதவினை திறக்க கூறியுள்ளார். ஆனால் செல்வகுமார் கதவினை திறக்காமல் சிறுமியிடம் தகாத வார்த்தைகளால் பேசி சிறுமியை திடிரென கட்டிப்பிடித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  இதனைத்தொடர்ந்து சென்னைக்கு சென்ற செல்வகுமாரின் மனைவி வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகியதால் 17 வயது சிறுமியை மீண்டும் மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


பின்னர் சிறுமியிடம் இதைப்பற்றி வெளியில் சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று சிறுமியை செல்வகுமார் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.மேலும் சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. அப்போது சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.




அப்போது மருத்துவர்கள் சிறுமியை பரிசோதனை செய்துள்ளனர். சிறுமி கர்ப்பமாக இருந்ததை அறிந்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சிறுமியிடம் விசாரணையில் பாணிபூரிகடைக்காரர் செந்தில்குமார் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததை கூறியுள்ளார். அதை தொடர்ந்த சிறுமி அவரது பாட்டியுடன் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளார்.


இந்த புகாரின் அடிப்படையில் மகளிர் காவல் துறையினர் 'போக்சோ' சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து பாணிபூரிகடைக்காரரை சிறையில் அடைத்தனர். பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் மற்றும் குழந்தை திருமணம் போன்றவற்றை தடுத்து நிறுத்த தங்களுடைய பிரச்சினைகளை கூற திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலர் தொலைபேசி எண்; 9444137000, சமூகநலத்துறை அலுவலர் தொலைபேசி எண்; 8903965770