அருள்நிதி நடிக்கும் டிமாண்டி காலனி 2 படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி திரைப்படமாக மாறியது தான் டிமான்டி காலனி. அருள்நிதி தனது நேர்த்தியான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி இருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சுமார் 8 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. படக்குழு ஏற்கனவே இன்று இப்படம் தொடர்பான வீடியோ வெளியாகும் என்று அறிவித்திருந்தது. அதன்படி இத்திரைப்படத்தின் ஒன்றரை நிமிட மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
பொதுவாக ஹாரர் திரைப்படம் என்றாலே இருட்டான சூழலில் அதிகமான காட்சிகள் உருவாக்கப்படும். தற்போது வெளியாகி உள்ள டிமாண்டி காலனி 2 வீடியோவிலும் அதிகமான காட்சிகள் இருட்டாகவும் திகிலாகவும் உள்ளது. இதனை பார்க்கும்போது இந்த படத்தின் முதல் பாகத்தைப்போன்று இந்த இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அருள்நிதி நடிக்கும் இந்த இரண்டாம் பாகத்தையும் ஞானமுத்து தான் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய சுப்பிரமணியன் மற்றும் ஆர்.சி ராஜ்குமார் தயாரிப்பில், பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையில் விரைவில் இந்த படம் திரையில் வெளியாக உள்ளது. அருள்நிதி திரைவரலாற்றில் மிகவும் முக்கியமான திரைப்படங்களில் டிமான்டி காலனி திரைப்படமும் ஒன்று. ஆகவே தற்போது வெளியாகவுள்ள அதன் இரண்டாம் பாகம் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .
மேலும் படிக்க