நடிகை தீபிகா படுகோன் நடிக்க இருந்த ஸ்பிரிட் மற்றும் கல்கி 2 ஆகிய இரு படங்களில் இருந்து அடுத்தடுத்து விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தீபிகா படுகோன் மீது சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. தற்போது முதல் முறைய கல்கி 2 மற்றும் ஸ்பிரிட் ஆகிய இரு படங்களில் இருந்து விலகியது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் தீபிகா படுகோன்
கல்கி 2 மற்றும் ஸ்பிரிட் படத்தில் விலகியது பற்றி தீபிகா படுகோன் ?
நான் யார் பெயரையும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்திய சினிமாவில் பெரிய பெரிய சூப்பர்ஸ்டார்கள் பல வருடமாக 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்து வருகிறார்கள். அதே நேரம் வார இறுதி நாட்களில் அவர்கள் வேலை செய்வது இல்லை. ஆனால் இத்தனை ஆண்டுகளில் இது தலைப்பு செய்தியாகியது இல்லை. இந்திய சினிமாத் துறை எப்போதும் ஒரு துறையாக இணைந்து பணியாற்றியது இல்லை. இந்திய சினிமாத் துறை மிகவும் ஒழங்கற்ற ஒரு துறையாகவே இருந்து வந்திருக்கிறது. இதை சரிசெய்ய ஒரு முறையான அமைப்பை உருவாக்குவது அவசியம். அதே நேரம் அண்மையில் தாயான மற்ற நடிகைகளும் 8 மணி நேர வேலை செய்கிறார்கள். ஆனால் என்னைத் தவிர மற்றவர்கள் யாரும் என் அளவிற்கு பரபரப்பாக பேசப்படவும் இல்லை. " என தீபிகா படுகோன் கூறியுள்ளார்
தீபிகா படுகோன் தற்போது அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து ஷாருக் கான் நடிக்கும் கிங் படத்தில் தீபிகா படுகோன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.