அதனை முன்னிட்டு தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு மோட்டிவேஷனல் பதிவை ஷேர் செய்திருந்தார். அது அவரது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.அமெரிக்காவில் பிறந்த தீபிகா படுகோன்  தனது குடும்பத்துடன் சிறு வயதிலேயே கர்நாடகாவிற்கு  குடியேறினார். அப்போது அவர் 11 மாத குழந்தை. அதன் பிறகு பள்ளிப்படிப்பை முடித்து மாடலிங் , விளம்பரம் , சினிமா என படிப்படியாக முன்னேறினார் தீபிகா படுகோன்.  Born with silver spoon  என்பதாகத்தான் தீபிகாவின் வாழ்க்கை இருந்தது. ஆனாலும் 2014 ஆம் காலக்கட்டத்தில் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கிறார். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையா அல்லது தொழில்முறை போட்டியால் ஏற்பட்ட மன உளைச்சலா என கேட்டபொழுது, காரணம் எதுவுமே இல்லாத பொழுதும் நான் வெறுமையாகவும் , இருளில் இருப்பது போலவும்  உணர்ந்தேன் . அதிலிருந்து மீள எனது குடும்பம் உதவியது. நான் மனநல மருத்துவரை அனுகி முழுமையாக குணமடைந்தேன் என பின்நாட்களில் தனது நேர்காணல்களில் தெரிவித்தார். மன உளைச்சல் என்பது ஒரு நோய் அது சிகிச்சை எடுத்தால் குணமாகிவிடும் , அவர்களை பைத்தியம் என முத்திரை குத்தாதீர்கள் என வெளிப்படையாக பேசிய தீபிகாவின் துணிவை பலரும் பாராட்டினர்.







இந்நிலையில் தனது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்ட  வீடியோவிற்கு கேப்ஷனாக "உங்கள் பேரின்பத்தைப் பின்தொடரும் போது, ​​நீங்கள் எப்போதும் இருக்கும் பாதையிலேயே உங்களை வைத்துக்கொள்ளுங்கள்... இது  நீங்கள் வாழ வேண்டிய வாழ்க்கை..... உங்கள் பேரின்பத்தைப் பின்பற்றுங்கள். பயப்படாதீர்கள்..உங்களுக்கான கதவுகள் எப்போது திறக்க வேண்டுமோ அப்போது திறக்கும் ” என பதிவிட்டுள்ளார்.  தீபிகா படுகோன் ஷேர் செய்திருந்த வீடியோவின் தொடக்கத்தில் சஞ்சய் பன்சாலி தீபிகாவிற்கான விருதினை அறிவிக்க , அவர் அடுத்தடுத்த விருதுகளை பெற்றதற்கான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதனை தொடர்ந்து பேசிய தீபிகா “ உங்களுக்கான தொழிலை கட்டமைக்கும் பொழுதுதான் உங்கள் வாழ்க்கை உருவாகும் என்பார்கள் . அதனை மறக்க முடியாது ஆனால் நான் அதிலிருந்து மாறுபட்டவளாக இருந்தேன். நான் ஒரு வித்தியாசமான நடிகை. உங்களால் நேர்மறையாக எல்லாவற்றையும் அனுக முடிந்தால் போதும். எனது வித்தியாசமான கோணங்கள் மற்றும் வித்தியாசமான பார்வைதான் என்னை இந்த அளவுக்கு வளர்ச்சியடைய வைத்திருக்கிறது , நன்றி “ என அந்த வீடியோவில் பேசி, தனது ரசிகர்களை உற்சாக படுத்தியுள்ளார் தீபிகா படுகோன்.