கணவர் ரன்வீர் சிங்கிடம் தனக்குப் பிடித்தது என்னவென்று பட்டியலிட்டுள்ளார் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே.
இந்திய சினிமாவின் குயினாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோன். என்றும் மாற இளமையோடும் வசீகரத்தோடு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த தீபிகா படுகோன் அமெரிக்காவில் பிறந்தவர். கடந்த 1986 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள டென்மார்க்கின் தலைநகரமான கோப்பென்ஹாகெனில் பிறந்தார். இவர் தாயார் பெயர் உஜ்ஜலா மற்றும் தந்தை பிரகாஷ் படுகோன்.
பிரகாஷ் படுகோன் மிகச்சிறந்த பூப்பந்தாட்ட வீரராகவும் இருந்திருக்கிறார். தீபிகா என்னதான் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக களமிறங்கியிருந்தாலும் அவர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர். தீபிகா 11 மாத குழந்தையாக இருக்கும்பொழுது , குடும்பத்துடன் அவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு குடியேறியுள்ளனர். பெங்களூரில் உள்ள சோபியா உயர்நிலை பள்ளியிலும் , மவுண்ட் கார்மெல் கல்லூரியில் தனது கல்வியை முடித்தார். பின்னர் மாடலிங், ஃபேஷன் ஷோ, விளம்பர படங்கள் என திரைத்துறையில் கால்பதித்த தீபிகா தற்போது முன்னணி நாயகியாக வலம்வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் ‘கெஹ்ரையன்’ என்ற திரைப்படம் வெளியானது. ‘கெஹ்ரையன்’ படத்தில் 'ஒரு முழுமையான மாஸ்டர் கிளாஸ் நடிப்பை' வழங்கியதற்காக தீபிகா படுகோனைப் பற்றி பெருமைப்படுகிறேன் என்று ரன்வீர் சிங் ஏகத்துக்கும் பாராட்டியிருந்தார்.
ரன்வீர் எப்போதுமே வெளிப்படையாக பேட்டிகள், சோசியல் மீடியா போஸ்டுகள் என இருப்பவர். ஆனால், தீபிகா படுகோனே அப்படியே அதற்கு எதிர்மறை பர்சனாலிட்டி. எப்போது சமூக வலைதளங்களில் பெர்சனல் லைஃப் பற்றி அடக்கி வாசிப்பவர். ஆனால் அவரே முதன்முறையாக கணவர் ரன்வீர் பற்றிய நற்குணங்களைப் பட்டியலிட்டுள்ளார்.
ரன்வீர் பற்றி தீபிகா, "ரன்வீர் தான் என் வாழ்வின் சியர் லீடர். சமூக ஊடகங்களில் மட்டுமல்ல எனது வாழ்க்கையிலும் அவர்தான் சியர் லீடர். நான் தோட்ட வேலைகள், இல்லை எப்போதாவது சமையல் என ஈடுபட்டால் ரன்வீர் தான் எனது இமோஷனல் பார்ட்னர். என் பெற்றோரை சந்திக்கும் போதெல்லாம் என்னைப் பற்றி எவ்வளவு பெருமிதம் கொள்வதாகப் பேசுவார். என் சின்னச் சின்ன அசைவுகளுக்கும் அக்கறை காட்டுவார். அதுதான் நான் ரன்வீரிடம் ரசிக்கும் குணம். இதற்காக அவரை நான் நிறைய பாராட்டியும் இருக்கிறேன்.
ரன்வீர் தனது உணர்வுகளை குடும்பத்தாரிடம் பாரபட்சமின்றி தாராளமாகக் காட்டுவதற்காக அனைவரிடமும் பாராட்டு பெறுவார். அதுதான் ரன்வீர்" என்றார்.
ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் கடந்த 2018ல் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதி ஆன் ஸ்க்ரீனிலும் சரி, ஆஃப் ஸ்க்ரீனிலும் சரி அனைவராலும் கொண்டாடப்படும் சூப்பர் ஹிட் ஜோடி.