திரையுலகைச் சேர்ந்த நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வது, விவாகரத்து பெறுவது, சோசியல் மீடியாவில் இருந்து புகைப்படங்களை அகற்றுவது, பார்ட்னரை பிளாக் செய்வது ஆகியவை அவ்வப்போது நடைபெறும் வழக்கமான ஒன்றுதான்.
முதல் குழந்தை :
அந்த வகையில் பாலிவுட் திரையுலகின் மிகவும் க்யூட் ஜோடியாக வலம் வரும் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தம்பதி 2018ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் அவரவரது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்தத் தம்பதியினர் அவர்களின் முதல் குழந்தையை வரவேற்க உள்ளனர் என்ற அறிவிப்பு சமூக வலைதளம் எங்கும் வைரலாகப் பரவி வந்தது. இடைப்பட்ட நேரத்தில் தீபிகா படுகோன் நடித்த அதிரடி ஆக்ஷன் காட்சிகள் கொண்ட வீடியோ வெளியானதால் தீபிகாவின் கர்ப்பம் குறித்து ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. இந்தக் குழப்பத்தை ரன்வீர் சிங் போஸ்ட் தெளிவுபடுத்தியது.
திருமண புகைப்படங்கள் நீக்கம் :
இந்நிலையில் திடீரென நடிகர் ரன்வீர் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திருமண புகைப்படங்களை நீக்கியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கர்ப்பமாக இருக்கும் மனைவியை பிரியப்போகிறாரா ரன்வீர் சிங் என பல கேள்விகள் எழுந்தன. ஆனால் ரன்வீர் சிங் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திருமண புகைப்படங்கள் மட்டுமே நீக்கப்பட்டு இருந்தன. தீபிகா படுகோன் உடன் அவர் இருக்கும் மற்ற புகைப்படங்களை அனைத்தும் அப்படியே இருந்தது சற்று ஆறுதல் கொடுத்தது.
உண்மையில் ரன்வீர் சிங் 2023ஆம் ஆண்டு முன்னர் போஸ்ட் செய்த புகைப்படங்களை மட்டுமே அகற்றியுள்ளார். அவற்றை அவர் பாதுகாக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அவர்கள் இருவருக்கும் இடையில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்பது தெளிவாகிறது.
தீபிகாவின் க்யூட் செயல் :
இந்நிலையில் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தங்கள் பயணத்தை முடித்துக்கொண்டு முன்னதாக திரும்புகையில் கேமராவில் சிக்கியுள்ளனர். தன்னுடைய பேபி பம்ப்பை மறைப்பதற்காக தீபிகா படுகோன் செய்த க்யூட்டான செயலை படம்பிடித்த ரசிகரின் வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
தீபிகா படுகோன் தற்போது 'கல்கி 2898 AD' மற்றும் சிங்கம் அகெய்ன் படத்தின் ரிலீசுக்காக மிகவும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார். அவர் பிரசவத்திற்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிப்பாரா இல்லையா என்பது குறித்து பிறகு தான் தெரியவரும்.