பாலிவுட் திரையுலகின் மோசட் கியூட் ரியல் ஜோடிகள் ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் இருவரும் 6 ஆண்டு காலம் காதலித்து வந்த நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு மிகவும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். இருவரும் அவரவர் கேரியரில் படு பிஸியாக கவனம் செலுத்தி வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தான் தீபிகா கர்ப்பமாக இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். வர இருக்கும் தங்களுடைய குழந்தைக்காக மிகவும் ஆவலுடன் கனவுகளுடன் காத்திருக்கிறது இந்த ஜோடி. 



 


கடைசியாக பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் நடிப்பில் பான் இந்தியன் படமாக மிகவும் பிரமாண்டமான தயாரிப்பில் வெளியான 'கல்கி 2898 AD' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தீபிகா படுகோன்.  


 




இந்நிலையில் தீபிகா படுகோனுக்கு இந்த மாதம் 28ம் தேதி பிரசவத்திற்காக நாள் குறித்துள்ளனர் மருத்துவர்கள். தென் மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் தான் அவரின் பிரசவம் நடைபெற உள்ளது. அங்கு தான் அவருக்கு மாதாந்திர செக்கப்பும் நடைபெறு வருகிறது. பிரசவ காலம் நெருங்கி விட்டதால் முழுமையாக ஓய்வு எடுத்து வருகிறார். பிரசவத்திற்கு பிறகு அவர் குறிப்பிட்ட காலத்திற்கு ஓய்வு எடுக்கவும் குழந்தையுடன் நேரம் செலவழிக்கவும் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 







ஒவ்வொரு நாளும் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதி ரொமான்டிக் மெட்டர்னிட்டி போட்டோஷூட் புகைப்படங்களை தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு லைக்ஸ்களை குவித்து வருவதுடன் பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.