நடிகர் ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் படம் மூலம் பாலிவுட் திரை உலகில் நடிகையாக அறிமுகமான நடிகை தீபிகா படுகோனே. இவர் சுமார் 50 திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.  பாலிவுட் மட்டுமின்றி தமிழ் திரைப்படத்திலும் நடித்து உள்ளார்.


இவர் தற்போது பாலிவுட் திரையுலகின் மகாராணி என அழைக்கப்படுகிறார். ஒரு படத்தில் நடிப்பதற்கு முன்பு கதாபாத்திர தேர்வு மற்றும் கதை தேர்வு ஆகியவற்றில் கவனமாக செய்யப்படுவதில்லை வல்லவர் தீபிகா. 


இதனால் தான் அவர் இன்றும் பாலிவுட்டின் முன்னணி நடிகை என்ற பெருமையை பெற்று இருக்க முடிகிறது. இதன் காரணமாகவே இவரது படங்கள் அதிக கவனம் பெருகின்றன.  புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் இவருக்கு  சம்பளமாக 10 முதல் 12 கோடி வரை கிடைக்கிறது. 


இவர் நடிகர்  ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆனவுடன் இவர்கள் இருவரும் படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோன் இணைந்து மஸ்தானி தற்போது 86 திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து இருக்கின்றனர்.



இதற்கிடையே, தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் தம்பதி மும்பையில் உள்ள அலிபாக் பகுதியில் சொகுசு பங்களா ஒன்றை வாங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.


சமூக வலைதளங்களில் எப்போதும் படு ஆக்டிவாக இருக்கும் நடிகை தீபிகா படுகோன் தினமும் தனது அன்றாட வாழ்க்கை குறித்தும், வெளியே செல்லும்போது எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் வீடியோக்களை தவறாமல் வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.


அதனாலேயே இவரை சமூக வலைத்தளங்களில் பின்தொடர்வோர் இனி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 






இந்நிலையில் பேட்மிண்டன் விளையாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் தீபிகா படுகோன் தனது சமூக வலைத்தளத்தில் விளையாடி முடித்தவுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.


அதில், விளையாட்டிற்கு பிறகான பொலிவு எனக் குறிப்பிட்டுள்ளார் தீபிகா படுகோன். இதனைக் கண்ட பி.வி.சிந்து, எவ்வளவு கேலரிகளுக்கு பிறகு இது? என கேள்வி எழுப்பினார். 


கடந்த வாரம் தான் தீபிகா படுகோனும், ரன்வீர் சிங்கும் இணைந்து பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுடன் இரவு உணவு உண்டனர்.


அப்போது எடுத்த புகைப்படங்களை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது