சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்த நடிகர் சந்தானம் ஆரம்பக் காலகட்டத்தில் முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் காமெடியான மற்றும் மிகவும் ஒரு வலுவான இடத்தை கைப்பற்றி இருந்தார். அதை தொடர்ந்து சமீப காலமாக ஹீரோ சப்ஜெக்டில் மட்டுமே நடித்து தற்போது ஒரு கம்ப்ளீட் ஹீரோ மெட்டீரியலாகவே மாறிவிட்டார். தில்லுக்கு துட்டு, டகால்டி, டிக்கிலோனா, ஏஜென்ட் கண்ணாயிரம், சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஹீரோவாக தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்து விட்டார்.  


 



 


காமெடி கலந்த ஹாரர் ஜானர் :


அந்த வகையில் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் கடந்த ஜூலை 28ம் திரையரங்குகளில் வெளியான 'டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தில் சுரபி, பெப்சி விஜயன், மாறன், ரெடின் கிங்ஸ்லி, தங்கதுரை, மொட்டை ராஜேந்திரன், தீபா என மிக பெரிய நகைச்சுவை திரைப் பட்டாளமே நடித்திருந்தனர். காமெடி கலந்த ஹாரர் ஜானரில் வெளியான இப்படம் வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபிசில் சுமார் 20 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 


சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு படத்தின் சீக்வெல் வர்ஷனாக வெளியான 'டிடி ரிட்டர்ன்ஸ்' படத்தில் பேய் பங்களாவில் மாட்டிக்கொண்ட சந்தானம் மற்றும் டீம் படும் அவஸ்தை ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தது. இப்படம் வெளியான ஒரு மாதம் கழித்து செப்டம்பர் 1ம் தேதியான இன்று முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 


அருமையான வரவேற்பு :


ஓடிடி தளத்தில் வெளியான முதல் நாளே 'டிடி ரிட்டர்ன்ஸ்' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திரையரங்கில் வெளியான போதே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளதால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் ரசிகர்கள். மேலும் ஒரு கூடுதல் அட்வான்டேஜ் என்னவென்றால் இந்த வாரம் வேறு எந்த ஒரு தமிழ் படமும்  ஓடிடியில் 'டிடி ரிட்டர்ன்ஸ்' படத்துக்கு போட்டியாக வெளியாகவில்லை. இதனால் இப்படத்திற்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது. 


எகிற போகும் மார்க்கெட் : 


சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறாமல் இருந்த நிலையில் இப்படம் சரியான கம்பேக் படமாக அமைந்துள்ளது. டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளதால் இனி சந்தனம் மார்க்கெட் எகிறபோகிறது என்பதால் அவரின் தீவிர ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.