1999 ஆம் ஆண்டு  தொகுப்பாளராக அறிமுகமாகிய திவ்ய தர்ஷினி, பாலச்சந்தரின் 'ரெக்கை கட்டிய மனசு' சீரியலில் நடித்தார். அதன் பிறகு சில படங்களில் நடித்த திவ்ய தர்ஷினி  'செல்வி' 'அரசி' போன்ற சீரியல்களில் நடித்தார். அதனைத்தொடர்ந்து விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய திவ்ய தர்ஷினி, காபி வித் டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த திவ்ய தர்ஷினி தனது நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்தத் தம்பதி கடந்த 2017 ஆம் ஆண்டு பிரிந்தது. விவாகரத்திற்கு பின்னர் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த டிடி அண்மையில் ராஜமெளலி இயக்கத்தில்  உருவாகியுள்ள  ‘ஆர்.ஆர்.ஆர்’ குழுவினருடன் உரையாடினார்.


 






இந்த நிலையில் இன்று  டிடி வீல் சேரில் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து விளக்கம் அளித்த டிடி கீழ் வாத பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னால் வெகுதூரம் நடக்கமுடியாது என்றும் ஆனால் இதெல்லாம் தனக்குள் இருக்கும் குழந்தையை தடுக்க முடியாது என்றும் விரைவில் இது குணமாகி விடும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.


இந்த நிலையில் டிடி துபாய்க்கு டூர் சென்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்