ரூபாய் 999ல் ஒரு புதிய ப்ளானை அண்மையில் பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ப்ரீமியம் ஓடிடி பயன்களும் அடக்கம். ஃபைபர் டு ஹோம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் பிஎஸ்என்எல்லின் சூப்பர் ஸ்டார் ப்ரீமியம் திட்டமாகக் கருதப்படுகிறது. திட்டத்தின்படி 2000 ஜிபி வரை 150 எம்பிபிஎஸ் வேகத்தில் பயன்படுத்தலாம். அதன்பிறகு அதன் வேகம் குறையும். இதற்கு சப்ஸ்க்ரைப் செய்பவர்களுக்கு டிஸ்னி ஹாட்ஸ்டார் ப்ரீமியம் கணக்கு இலவசமாகக் கிடைக்கும். இதுதவிர இதர 8 ஓடிடிகளும் இந்தத் திட்டத்தில் கிடைக்கப்பெறுகின்றன. இதில் சோனி லிவ் ப்ரீமியம், ஜீ5 ப்ரீமியம் ஆகியவையும் அடக்கம்.
இந்தத் 999 ப்ரீமியம் ப்ளான் ஏற்கெனவே ஏர்டெல், ஜியோ மற்றும் எக்ஸைடெல் ஆகிய ப்ராட்பேண்ட்களில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் திட்டத்தில் ஜீ5, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் கணக்குடன் அமேசான் ப்ரைமும் கிடைக்கப்பெறுகிறது. இதுவே ஜியோ ஃபைபரில் சன் நெக்ஸ்ட், நெட்ப்ளிக்ஸ், ஹோய்சோய், ஆல்ட் பாலாஜி என மொத்தம் 15 ப்ரீமியம் கணக்குகள் இலவசமாகக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பிராட்பேண்ட் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர அதிவேக இன்டர்நெட்டும், அதனை குறைந்த விலையிலும் கொடுத்து வருகின்றன.
இந்நிறுவனங்களில் பலர் ஹை-ஸ்பீட் இன்டர்நெட் கனெக்ஷன்களை வழங்கி வருகிறார்கள். முன்பை போல இல்லாமல் புறநகர் பகுதிகள் மற்றும் சில கிராமப்புற பகுதிகளுக்கும் கூட பிராட்பேண்ட் அணுகல் பரவலாக கிடைக்கும் காரணத்தால், தங்களுக்கு ஏற்ற பிளான்களை தேர்வு செய்ய மக்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. வீட்டில் பல யூஸர்கள் மற்றும் டிவைஸ்கள் இருந்தால் ஹை-ஸ்பீட் இன்டர்நெட் கனெக்ஷன் இருப்பது பயனுள்ளதாக இருக்கும்.
ஜியோ நிறுவனம் டேட்டா லிமிட் இன்றி 150 Mbps வரை டவுன்லோட் ஸ்பீடை பயனர்களுக்கு தருகிறது. மேலும் இந்த பிளானை எடுப்பவர்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய OTT சேவைகளும் கிடைக்கிறது. இது தவிர நெட்ஃபிக்ஸ், ஜீ 5, சோனி லிவ், ஆல்ட் பாலாஜி, வூட் செலக்ட், ஈரோஸ் நவ் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 15 ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கு அணுகலை வழங்கும் திட்டங்களையும் ஜியோ வேறு ஒரு பிளானில் வழங்கி வருகிறது.
ஏர்டெல்லின் இந்த பிராட்பேண்ட் பிளானை எடுக்கும் பயனர்கள் 200 Mbps வேகத்திலான அன்லிமிட்டட் டேட்டா பெறலாம். பிராட்பேண்ட் இணைப்பைத் தவிர, டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் ஒரு வருடத்திற்கான அமேசான் ப்ரைமும் பெற முடியும். தேவைக்கேற்ப திரைப்படங்கள் அல்லது ஷோக்களை பார்ப்பதற்கு வசதியாக பயனர்கள் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப்பிற்கான வசதியையும் பெறலாம்.
ரூ.950 விலையில் ஒரு மாதத்திற்கு 100 Mbps ஸ்பீடில் இன்டர்நெட் கனக்ஷனை டாடா ஸ்கை வழங்கினாலும், இந்த பிளானுடன் கூடுதலாக எந்த ஸ்ட்ரீமிங் சேவைகளையும் வழங்கவில்லை. இந்த பிளானை 3 மாதத்திற்கானதாக எடுத்தால் ரூ.900, 6 மாதங்களுக்கு எடுத்தால் ரூ.750, வருடத்திற்கு ரூ.700 என்ற கட்டணத்தின்படி முறையே ரூ.2,700, ரூ.4,500 மற்றும் ரூ.8,400 என்ற சலுகை விலையை பெறலாம்.