தேசிய விருது வென்ற பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் புதிய படத்தின் பூஜை சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தில் சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிக்க இருப்பதும் உறுதியானது. சிம்புவிற்காக எஸ்டிஆர் 49 படத்தில் நடிக்க சந்தானம் ஓகே சொன்னார் என்ற செய்திகளும் வெளியாகி வைரலானது. டிராகன் பட நாயகி கயாடு லோஹர் இப்படத்தில் நடிக்க கமிட் ஆனார். பராசக்தி, இதயம் முரளி போன்ற படங்களை இயக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் இப்பட்ததை தயாரிக்கிறது. 

Continues below advertisement

பார்க்கிங் பட இயக்குநரை கலட்டிவிட்ட சிம்பு?

இப்படி எஸ்டிஆர் 49 படம் குறித்த செய்திகள் நாள்தோறும் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் என்றும் அதில் சாய் பல்லவி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. எஸ்டிஆர் 49 என்று கூறப்பட்ட நிலையில், திடீரென வெற்றிமாறன் கூட்டணியில் சிம்பு நடிப்பது உறுதியானது. இயக்குநர் வெற்றிமாறன் பிறந்தநாளன்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ப்ரோமோ வீடியோ மூலம் உறுதி செய்தார். வடசென்னையை மையப்படுத்தி உருவாகும் இப்படத்திற்கு சிம்பு அதிக மெனக்கட்டு வருகிறார். இப்படமும் எஸ்டிஆர் 49 என்றே படக்குழு அறிவித்துள்ளது. 

கெடு விதித்த டான் பிக்சர்ஸ்

அப்போ ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாக இருந்த படம் ட்ராப் ஆகிவிட்டதா என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. இப்படத்திற்காக டான் பிக்சர்ஸ் நிறுவனம் சிம்புவிடம் மிகப்பெரிய தொகையை அட்வான்ஸ் அளித்திருக்கிறது. அதேபோன்று சந்தானத்திற்கும் முன் பணம் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் டான் பிக்சர்ஸ் நிறுவனர் ஆகாஷ் பாஸ்கரன் மீது வந்த புகாரால் சிம்பு இப்படத்தில் நடிப்பதில் தயக்கம் காட்டியதாக தெரிகிறது. படத்தின் இரண்டாம் பாதியை இயக்குநரிடம் மாற்ற சொன்னதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  இந்நிலையில், டான் பிக்சர்ஸ் நிறுவனம் சிம்புவிடம் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திரும்ப தருமாறு கெடு விதித்திருக்கிறதாம். 

Continues below advertisement

எஸ்டிஆர் 50 பட இயக்குநர் யார்?

வெற்றிமாறன் படத்தில் கமிட் ஆகியிருக்கும் சிம்புவிற்கு இந்த புதிய சிக்கலை எப்படி சமாளிக்க போகிறாரோ? அதுமட்டும் இல்லாமல் சிம்பு சொன்னதால் தான் சந்தானமும் நடிக்க ஒப்புக்கொண்டார். அவரிடம் கொடுத்த முன் பணத்தையும் சிம்பு தான் வாங்கி தர வேண்டும் என டான் பிக்சர்ஸ் முறையிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. படத்திற்கான பூஜைக்கு லட்சக்கணக்கில் செலவு செய்திருப்பதால் அந்தத் தொகையை திருப்பி தருமாறு தயாரிப்பு நிறுவனம் கேட்டுள்ளது. சிம்புவின் நெருங்கிய வட்டாரங்கள் தயாரிப்பு நிறுவனத்தை சமாதானப்படுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனிடையே எஸ்டிஆர் 50 படத்தை யார் இயக்குவார்கள் என்பது தான் சிம்புவிற்கு தலைவலியாக இருக்கிறதாம். அடுத்தடுத்து லைன் அப்பில் படங்களை வைத்துகொண்டு யார் படத்தில் நடிக்க போகிறார். யார் இயக்குநர்கள் என்பது தான் தலையை பிய்க்க வைத்துள்ளதாம்.