ஸ்ரீகாந்த் மற்றும் சினேகா நடிப்பில் வந்த, ஏப்ரல் மாதத்தில் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் டேனியல் பாலாஜி. இவரும் மறைந்த நடிகர் முரளியும் அண்ணன் - தம்பிகள். தரமணி திரைப்பட நிறுவனத்தில் படம் இயக்குவதற்கான படிப்பைப் படித்தார். ஆனால், டேனியல் பாலாஜி ஒரு படம் கூட இயக்கவில்லை. எனினும் காதல் கொண்டேன், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், அச்சம் என்பது மடமையடா, பைரவா என்று பல படங்களில் நடித்துள்ளார்.

Continues below advertisement

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 30க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இதில் வேட்டையாடு விளையாடு மற்றும் பொல்லாதவன் ஆகிய படங்கள் டேனியல் பாலாஜிக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய படங்களாக அமைந்தன. சினிமாவில் முரட்டுத் தனமான வில்லனாக இருந்தாலும் உண்மையில் குழந்தை குணம் கொண்டவர்.

Continues below advertisement

டேனியல் பாலாஜி சென்னை ஆவடியில் ஸ்ரீ ரக்தூல் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் ஒன்றை கட்டியுள்ளார். இது அவரது அம்மாவின் ஆசை. எனினும் ஆன்மீக நம்பிக்கை கொண்ட பாலாஜி ஒருநாளும் இறைவழிபாடு மேற்கொண்டது கிடையாது. ஆனால், அவர் தனது சொந்த செலவில் கோயில் கட்டியிருக்கிறார். கடவுள் எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட டேனியல் பாலாஜி கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் 48 வயதில் இறைவனிடம் சேர்ந்தார்.

இந்த நிலையில் தான் டேனியல் பாலாஜி தான் இறக்க போவதை முன் கூட்டியே கணிந்திருந்தார் என்று அவர் அம்மா கூறியிருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு டேனியல் பாலாஜியின் முதலாமாண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அப்போது பேசிய அவருடைய அம்மா கூறியிருப்பதாவது: என்னுடைய மகனுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்க போகிறது என்பதை முன்கூட்டியே கணிக்கும் சக்தி இருந்தது.

அப்படித்தான் இந்த வருடம் நான் இருக்கமாட்டேன் என்று இயக்குநர் வெற்றிமாறனிடம் கூறியிருக்கிறார். அதாவது, இந்த வருடம் உன்னுடைய பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவோம் என்று இயக்குநர் வெற்றிமாறன் டேனியல் பாலாஜியிடம் சொல்லியிருக்கிறார். அதற்கு பாலாஜி நான் இந்த வருடம் இருக்கமாட்டேன் என்று கூறியிருக்கிறார். அப்போது அது வெற்றிமாறனுக்கு கூட புரியவில்லையாம். அவர் வேறு எங்கோ வெளி ஊருக்கு செல்ல உள்ளார் என்று தான் நினைத்துளளார். பின்னர் அவர் கூறிய வார்த்தை உண்மையான பிறகு தான் அவருக்கு புரிந்ததாக, வெற்றிமாறன் என்னிடம் கூறினார் என்று டேனியல் பாலாஜியின் தாயார் கூறியுள்ளார்.