ஃபாதிமா சானா ஷைக்

ஆமீர் கான் நடித்த தங்கல் படத்தின் மூலம் பரவலான கவனமீர்த்தவர் நடிகை ஃபாதிமா சானா ஷைஃக். இப்படத்திற்கு முன்பாக குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார் என்றாலும் தங்கல் திரைப்படம் அவருக்கு ஒரு நடிகையாக பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து லுடோ , தக்ஸ் ஆப் இந்துஸ்தான் , சாம் பகாதூர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது ஆ. மாதவன் நடிக்கும் ஆப் ஜெய்ஸா கோய் படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தபோது தனக்கு ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகளைப் பற்றி ஃபாதிமா சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துகொண்டார். 

படுக்கைகு அழைத்த தயாரிப்பாளர்

" பொதுவாக நடிக்க வாய்ப்பு தேடுபவர்கள் தென் இந்திய சினிமாக்கள் பக்கம் நம்பி வருவோம் . இங்கு படங்களில் நடித்து ஓரளவிற்கு அடையாளம் கிடைத்துவிட்டால் பின் இந்தி படங்களிலும் வாய்ப்பு கிடைத்துவிடும். அந்த வகையில் ஒரு முறை ஹைதராபாதில் ஒரு படத்தின் காஸ்டிங் ஏஜண்ட் இடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் என்னிடம் ' எல்லாமே செய்வதற்கு தயாரா ' என்று கேட்டார். நானும் நான் நடிக்கும் படத்தில் எனது முழு உழைப்பை வழங்குவேன் என்று சொன்னேன். அதற்கு பிறகு மறுபடியும் எல்லாமே என்று அவர் அழுத்தி சொன்னார். எனக்கு அவர் பேசுவது எரிச்சலை ஏற்படுத்தினாலும் அவர் வெளிப்படியாக அதை சொல்வது வரை நான் புரியாத மாதிரி நடித்தேன். பின் ஒரு கட்டத்திற்கு மேல் அவர் கடுப்பாகி ஃபோனை வைத்துவிட்டார். இன்னொரு முறை ஹைதராபாதில் படப்பிடிப்புக்கு சென்றபோது அங்கு தயாரிப்பாளர்கள் சின்ன சின்ன நடிகைகளை முன் வைத்துக் கொண்டே வெளிப்படையாக பேசினார்கள். இங்கு இப்படிதான் நீங்கள் நிறைய பேரை சந்திக்க வேண்டி இருக்கும் என்று நேராகவும் சொல்லாமல் சுற்றி வளைத்து பேசுவார்கள். இந்த மாதிரி நிறைய பேருக்கு நடந்திருப்பதை நாங்கள் கேள்வி பட்டிருக்கிறோம். " என அவர் தெரிவித்துள்ளார்