Thunivu Actor Death: துணிவு படத்தில் நடித்த டான்சர் ரமேஷ் சென்னையில் உள்ள கே.பி. பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இவர் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடூப் சேனல்களின் மூலம் பிரபலமடைந்த இவர் சமீபத்தில் தான் சில படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அவரது நண்பர்களுக்கும், இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடர்ந்து வருபவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீசான துணிவு படத்தில் சிறிய வேடத்தில் நடித்து இருந்தார். இன்று அவரின் பிறந்தநாள் என்றும் கூறப்படுகிறது.
இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்று பலரது பாராட்டுகளைப் பெற்றார். இவர் தொடக்கத்தில் டிக்டாக்கில் தனது டான்ஸ் வீடியோக்களை பதிவிட்டு பலரையும் கவர்ந்து வந்தார். டிக்டாக் தடைசெய்யப்பட்ட பின்னர் இன்ஸ்டாகிராமில் தனது டேன்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இவரை 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராமில் பின் தொடருகின்றனர்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104. சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060