பாபா பாஸ்கர்


தனுஷ் நடித்த திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் நடனக் கலைஞராக அறிமுகமானவர் பாபா பாஸ்கர். 70 க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனக் கலைஞராக பணியாற்றியுள்ளார். திருவிளையாடல் ஆரம்பம் தொடங்கி தனுஷ் நடித்த பொல்லாதவன் , படிக்காதவன் , குட்டி , உத்தமபுத்திரன் , மாப்பிள்ளை , வேங்கை , 3 , வேலையில்லா பட்டதாரி , அனேகன் , மாரி , தங்கமகன் , கொடி , மாரி 2 , ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்களுக்கு பாபா பாஸ்கர் நடனக் கலைஞராக பணியாற்றி வருகிறார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 படத்தில் கதறல்ஸ் பாடலுக்கு பாபா பாஸ்கர் நடனம் கற்பித்துள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர் தனுஷும் தானும் பள்ளி காலத்து நண்பர்கள் என்று பாபா பாஸ்கர் தெரிவித்துள்ளார்.


8 ஆம் கிளாஸ் பாஸ் ஆக உதவிசெய்த தனுஷ்


தனியார் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தனுஷ் ‘ நானும் தனுஷூம் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். நான் எட்டாவது வரைதான் படித்தேன். அதற்கு மேல் எனக்கு படிப்பு வரவில்லை. ஆனால் நான் 8 ஆம் வகுப்பு பாஸ் ஆனதற்கு முக்கிய காரணம் நடிகர் தனுஷ் . எனக்கு முன்னாள் தான் அவர் உட்கார்ந்திருப்பார். நான் எல்லாம் அக்யூஸ்ட் என்று பெயர் வாங்கியவன் ஆனால் தனுஷ் அப்படி இல்லை அவர் பயங்கரமாக படிப்பவர். அவர் இருக்கும் தைரியத்தில் நால் விளையாட்டு டான்ஸ் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடிந்தது.






திருவிளையாடல் படத்தில் தனுஷ் நடித்த போது நான் அதில் உதவி நடனக் கலைஞராக வேலை செய்தேன். படத்தின் முதல் இரண்டு பாடல்களை எடுத்துவிட்டார்கள். நானே தயக்கத்தை விட்டு தனுஷை பார்த்து எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கும் படி கேட்டுவிட்டேன். உடனே தனுஷ் நானும் அது தான் நினைத்தேன். இந்தப் படத்தில் இன்னும் ஒரு பாட்டு இருக்கிறது அதை நீயே கோரியோ பண்ணு என்று சொன்னார். நான் தனுஷிடம் ஒன்றை எதிர்பார்த்து சென்றேன் . அவரும் அதையே எனக்கு செய்தார் .” என்று பாபா பாஸ்கர் தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க : Maari Serial: சாஸ்திரிக்கு தெரிய வந்த ரகசியம்.. தாரா செய்த புது சூழ்ச்சி - மாரி சீரியல் அப்டேட்!


Samantha Insta Post : ஜெயிலில் போடணும்..3 பக்கத்திற்கு பதிலடி கொடுத்த நடிகை சமந்தா!