இந்தியாவில் ஆண்டுதோறும் சினிமா துறையில் திறமையை வெளிப்படுத்தி வரும் நடிகர்களை கவுரவ படுத்தும் விதமாக தேசிய திரைப்பட விழா நடத்தப்பட்டு, கலைஞர்களுக்கு விருதுகளும் வழங்கப்படும். கடந்த ஆண்டு கொரோனா சூழல் காரணமாக இந்த விழா ஒத்திவைக்கப்பட்டது . இந்நிலையில் தேசிய திரைப்பட விழா வருகிற 25 ஆம் தேதி  டெல்லியில் நடைபெறும் என தற்போது அறிவிக்கப்படுருக்கிறது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உயரிய விருது வழங்கப்படவுள்ளது. திரையுலகில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களை அங்கீகரிக்கும் விதமாக தாதா சாகேப் பால்கே விருது  வழங்கப்படுகிறது.  இந்திய திரைத்துறையின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே பெயரில் இந்த விருது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் அந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் விரைவில் நடைபெறவுள்ள தேசிய திரைப்பட விழாவில் ரஜினி அந்த விருதினை பெருவார் என தெரிகிறது. தாதா சாகேப் பால்கே விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் வழங்க வாய்ப்புள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.




 


தமிழ்த்திரையுலகின் சூப்பர் ஸ்டாராக 40 ஆண்டுகள் வலம் வருபவர் ரஜினிகாந்த். தர்பார் படத்திற்கு பிறகு, இயக்குநர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. பின்னர், தீபாவளி விருந்தாக அண்ணாத்த திரைக்கு வரும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.அண்ணாத்த படத்திற்கான போஸ்டர்களை அடுத்தடுத்து வெளியிட்ட படக்குழு, கடந்த ஆயுதபூஜை தினத்தன்று அண்ணாத்த படத்தின் டீசரை வெளியிட்டது. அதில் நடிகர் ரஜினிகாந்தின் ஆக்‌ஷன் காட்சிகளும், பஞ்ச் வசனங்களும் நிறைந்திருந்தன. ஆனால், படத்தின் பிற நடிகர்கள் யாருமே அதில் காட்டப்படவில்லை.அதன் பிறகு  படத்தின் சிங்கிள் டிராக் என அழைக்கப்படும் மூன்று  வரிக்காணொளி பாடல்களை வெளியிட்டு அசத்தினர் படக்குழு.






 


 


லிங்கா படத்திற்கு பிறகு கபாலி, காலா, பேட்ட, தர்பார் என்று தனது வயதிற்கேற்ப பாணியை மாற்றிய நடிகர் ரஜினிகாந்த் நீண்ட காலத்திற்கு பிறகு, தனது ரசிகர்களை குஷிப்படுத்தும் நோக்கத்தில் முழு ஆக்‌ஷன் மற்றும் குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள திரைப்படத்தில் நடித்துள்ளார். இளமையான தோற்றத்தில் இந்த படம் முழுவதும் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அவரது தோற்றங்களும், ஸ்டில்களும் முத்து படத்தில் வரும் ரஜினியை நினைவுப்படுத்துவதாக இருக்கிறது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்திருக்கும் அண்ணாத்த படம் நிச்சயம் ரஜினி ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.