பிரபல இசையமைப்பாளரான டி.இமான் முன்னாள் மனைவி மோனிகா மீது பொய் வழக்கு போட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிரபல இசையமைப்பாளரான டி. இமான் கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது முன்னாள் மனைவி மீது வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
முன்னாள் மனைவி மீது குற்றச்சாட்டு
அதில், “ மனைவி மோனிகா, குழந்தைகளுக்கு ஏற்கனவே இருக்கும் பாஸ்போர்ட்களை மறைத்து, சட்டவிரோதமாக புதிய பாஸ்போர்ட்களுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், குழந்தைகளை நான் சந்திக்காத வண்ணம், அவர்களை வெளிநாட்டு அனுப்ப தவறான தகவலை அளித்து புதிய பாஸ்போர்ட் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். இதனையடுத்து விளக்கமளித்த பாஸ்போர்ட் அதிகாரி, குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் மீது நீதிமன்ற உத்தரவு இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், தலைமை பாஸ்போர்ட் அதிகாரி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் இமானின் முன்னாள் மனைவி மோனிகா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
விளக்கம் அளித்த முன்னாள் மனைவி
இந்த நிலையில் முன்னாள் மனைவி மோனிகா இந்தக் குற்றச்சாட்டை மறுத்து விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் குழந்தைகள் என்னிடம் வளரும் நிலையில், குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் பெற உரிமை தனக்கு உரிமை இருக்கிறது. குழந்தைகளின் பாஸ்போர்ட்டை கேட்டபோது, வீடு மாறும்போது அவை தொலைந்துவிட்டது என கூறினார். அதனால்தான் விதிமுறைகள்படி புது பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தேன். இந்த நேரத்தில் தான் இமான் என் மீதும் பாஸ்போர்ட் அதிகாரிகள் மீதும் பொய்யான வழக்கு போட்டிருக்கிறார். குழந்தைகள் பாஸ்போர்ட்டை வைத்திருக்க இமானுக்கு சட்டப்படி உரிமை இல்லை என அதிகாரிகள் கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது.
டி. இமான் மனைவிக்கு ஜீவனாம்சம் தரவில்லை என்றும் குழந்தைகளின் பராமரிப்புக்கு மட்டும் 5000 தருவதாகவும் மோனிகா தரப்பு கூறுகிறதாம்
தமிழ் சினிமா துறையில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வரும் டி. இமான் அண்மையில் மறுமணம் செய்துகொண்டார். அதற்கான புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலானது. டி. இமான் மறுமணம் செய்துகொண்ட பெண்ணின் பெயர் அமலி எனவும், இவர் பிரபல கலை இயக்குநர் உபால்டுவின் மகள் எனவும் கூறப்படுகிறது. இந்த திருமணத்தின்போது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர் என தெரிகிறது.
முன்னதாக, கடந்த 2008-ஆம் ஆண்டு இசையமைப்பாளர் டி.இமான், மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இரு குழந்தைகளுக்கு பெற்றோரான இந்த தம்பதியினர் கடந்தாண்டு இறுதியில் விவாகரத்து செய்தனர். 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இமான் மற்றும் மோனிகா ரிச்சர்ட் தம்பதியினர் விவாகரத்து அப்போது திரை பிரபலங்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.