மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், அது குறித்து பிரபலங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதனைப் பற்றி காணலாம்.
கௌதம் கார்த்திக்
சென்னையை இப்படி பார்க்கும்போது மனம் உடைகிறது. ஆனால் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய குழப்பங்களுக்கு மத்தியில் மக்கள் பாதுகாப்பாகவும், புகலிடங்களில் இருப்பதை உறுதி செய்வதற்காக தங்கள் உயிரையும் பாதுகாப்பையும் பணயம் வைத்து துணிச்சலான ஹீரோக்களை நான் பார்த்தேன். நீங்கள் செய்யும் அனைத்திற்கும் நன்றி, சென்னை மீண்டும் வீறுகொண்டு எழுந்து நிற்கும் என்பதை உறுதி செய்ததற்கு நன்றி. நாளை ஒரு புதிய நாள், அது என்ன சவால்களைக் கொண்டு வந்தாலும், தொடர்ந்து செல்வதற்கு நீங்கள் எங்களுக்கு பலத்தை அளித்துள்ளீர்கள் என்பதை அறிந்து நான் நன்றாக தூங்க செல்கிறேன்.
மாளவிகா மோகனன்
நான் பார்க்கும் அனைத்து புகைப்படங்களும் வீடியோக்களும் மிகவும் பயமுறுத்துகின்றன. எல்லோருக்கும் கவலையும் பயமும் இருக்கிறது. தயவு செய்து கவனமாக இருங்கள் மற்றும் அவசரம் இல்லாவிட்டால் வெளியே செல்ல வேண்டாம்
அஞ்சனா ரங்கன்
இந்த மிக்ஜாம் புயலானது நிறைய வலிமையான வாழ்க்கை பாடங்களை மக்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளது. கரண்ட் இல்லை, செல்போன்களில் சிக்னல் இல்லை. உலகமே நின்று போனது போல உள்ளது. நான் மாடியில் கிடைத்த சிக்னலை கொண்டு இதனை பதிவிட்டுள்ளேன். வீட்டிலே பாதுகாப்பாக இருங்கள்.
விஜய் டிவி புகழ்
இன்னைக்கு (நேற்று) நாம் பிரட் ஜாம் எடுத்துட்டு உள்ளே போய் விட வேண்டியது தான். பாதுகாப்பாக இருங்க மக்களே. தேவை என்றால் மட்டும் வெளியே செல்லுங்கள்.
வித்யூலேகா ராமன்
சென்னை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பலருக்கும் இன்று மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் கவலையளிக்கும் நாளாக இருந்தது. சூறாவளி நம்மில் பலருக்கு கருணை காட்டவில்லை, எங்கள் வீடுகளில் தண்ணீர் தேங்கி இருளில் மூழ்கியுள்ளது.அனைவரும் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருப்பதாக நம்புகிறேன். இதுவும் கடந்து போகும்.
சந்தோஷ் பிரதாப்
சென்னையை சுற்றியுள்ள மக்கள் பாதுகாப்பாக இருங்கள். தண்ணீர், உணவு, பேட்டரி சேமித்து வைத்து கொள்ளவும். தன்னார்வலர்கள் முடிந்தவரை உதவவும்.