நாள் - 05.12.2023 -  செவ்வாய் கிழமை


நல்ல நேரம்:


காலை 8.30 மணி முதல் காலை  9.00 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை


இராகு:


மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


குளிகை:


நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை


எமகண்டம்:


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


சூலம் - வடக்கு 


மேஷம்


மேஷம்


குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிலவும். உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். காரியத்தில் கண்ணும், கருத்துமாகச் செயல்படுவீர்கள். முயற்சிக்கு ஏற்ப உயர்வு உண்டாகும். குணநலன்களில் மாற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் புத்திக்கூர்மை வெளிப்படும். பணிபுரியும் இடத்தில் உயர்வான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உயர்வு நிறைந்த நாள்.


ரிஷபம்


குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செய்லபடவும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வீடு மற்றும் மனை  வாங்குவது சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். நட்பு மேம்படும் நாள்.


மிதுனம்


குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவுகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். வரவுகள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். மனதளவில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வெற்றி நிறைந்த நாள்.


கடகம்


குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் முடியும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். உடன்பிறப்புகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். ஆடம்பரமான செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வியாபார முயற்சிகளில் சிந்தித்துச் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


சிம்மம்


நண்பர்களுடன் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் நிலவும். கூட்டாளிகளின் மூலம் அனுகூலம் உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை உண்டாக்கும். எதிலும் பதற்றமின்றி செயல்படுவது நல்லது. ஆரோக்கியம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுபவம் மேம்படும். எதிர்ப்புகள் விலகும் நாள்.


கன்னி


வீட்டின் தேவைகள் நிறைவேறும். கடன் பிரச்சனைகள் குறையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பிறரைப் பற்றிய கருத்துகளைத் தவிர்க்கவும். தேவைக்கேற்ப வரவுகள் இருக்கும். சுபகாரிய பணிகளில் விவேகம் வேண்டும். மறதியால் சில பிரச்சனைகள் தோன்றி மறையும். அமைதி நிறைந்த நாள்.


துலாம்


எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மற்றவர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். திடீர் வரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். புதிய வேலை நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பழக்கவழக்கத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். தெளிவு பிறக்கும் நாள்.


விருச்சிகம்:


குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுகூலம் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும். தவறிய முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். செலவுகளில் தன்மைகளை அறிந்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.


தனுசு


எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் வெளிப்படும். கூட்டாளிகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கும். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் நிலவும். சுபகாரிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறுதி வேண்டிய நாள்.


மகரம்


எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படவும். உத்தியோக ரீதியாக அலைச்சல்கள் மேம்படும். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். அரசு வகையில் அனுசரித்துச் செல்லவும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பொறுமை வேண்டிய நாள்.


கும்பம்


குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாழ்க்கைத் துணைவர் வழி உறவுகளிடத்தில் மதிப்பு மேம்படும். புதிய ஒப்பந்தங்களால் லாபம் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.


மீனம்


பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணிபுரியும் இடத்தில் சாதகமான சூழல் ஏற்படும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். திடீர் செய்திகளின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். வியாபாரப் பணிகளில் பொறுப்புடன் செயல்படவும். குடும்ப பெரியவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். ஓய்வு நிறைந்த நாள்.