Continues below advertisement

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'தி கோட் ' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் செப்டம்பர் 5ம் தேதியான நாளை உலகெங்கிலும் உள்ள 5000க்கும் மேலான திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மிக பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு அமோகமாக நடைபெற்று வருகிறது. திரையரங்கம் எங்கும் திருவிழா கோலம் கொண்டு இருக்கும் 'தி கோட்' படத்தின் டிக்கெட் விற்பனை பல சாதனைகளை முறியடித்து வருகிறது. 

 

Continues below advertisement

 

'தி கோட்' படம் வெளியாக இன்னும் சில மணி நேரங்களில் இருக்கும் நிலையில் படம் குறித்த அப்டேட் ஒவ்வொன்றாக வெளியாகி ஹைப்பை பல மடங்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான சுப்பிரமணியம் பத்ரிநாத் 'தி கோட்' படத்திற்காக டப்பிங் பேசியுள்ளார். இந்த தகவலை அவரே தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். "கோட் படத்தில் ஒரு சிறிய பகுதியாக உள்ளேன். முதல்முறையாக ஒரு படத்தில் நான் என்னுடைய பங்களிப்பை கொடுத்தது ஸ்வாரஸ்யமாக இருந்தது.  உங்களுடைய கருத்துகளுக்காகவும், விமர்சனத்துக்காகவும் காத்திருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார். இப்படத்தில் கிரிக்கெட் வீரர் தோனியின் காட்சி இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இது தவிர 'தி கோட்' படத்தில் இன்னும் பல பல சர்ப்ரைஸ்கள் ரசிகர்கள்களை மகிழ்விப்பதற்காக காத்திருக்கிறது.